”இப்றாஹிம் நபியின் ஏகத்துவ உறுதி” சூரமங்களம் கிளை ஹஜ் பெருநாள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சூரமங்களம் கிளை சார்பாக கடந்த 7-11-2011 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். இதில் தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியர் மானாஸ் ” இப்றாஹிம் நபியின் ஏகத்துவ உறுதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.