”அதிக மதிப்பெண் பெருவது எப்படி?” தமிழகம் முழுதுவம் பயிற்சி வகுப்பு நடத்த TNTJ மாணவர் அணி முடிவு!

more_marksTNTJ மாணவரணியின் ஆலோசனை கூட்டம் மாநில தலைமையகத்தில் 15-11-09 ஞாயிற்று கிழைமை அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

மாநில மாணவரணி செயலாளர் S.சித்தீக்.M.Tech தலைமை வகித்தார், இதில் மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். மாணவரணியின் எதிர்கால செயல் திட்டம் பற்றி இதில் விவாதிக்கப்பட்டது.

மாவட்ட மாணவரணி நிர்வாகிகளின் கருத்துகள் கேட்கப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது. இறுதியில் கீழ்க்கானும் முடிவுகள் எடுக்கப்பட்டன. (இன்ஷா அல்லாஹ்)

1.தேர்வுகாலம் நெருங்குவதால் மாணவ மாணவிகளின் நலன் கருதி, “தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?” என்ற நிகழ்ச்சியை டிசம்பர் மாதம் 12 – ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை மாநிலம் முழுவதும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

2. இந்த நிகழ்ச்சியை ஒருங்கினைக்கும் பொருப்பு மண்டல மாணவரணி செயலாளர் “தாம்பரம்” K.சித்தீக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

3. தேர்வு காலத்தில் அதிக மதிப்பெண் எடுக்க மாணவ மாணவியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும், பெற்றோர்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும் விளக்கி கையேடு ஒன்றும் வீடியோ உரை ஒன்றும் தயாரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

4. அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற கையேடும், வீடியோ உரையும் இன்ஷா அல்லாஹ் டிசம்பர் முதல் வாரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் இணையதளத்தில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்!

5. மாணவரணி நிகழ்ச்சியில் வழிகாட்டல் வழங்கும் மாணவரணியின் கல்வியாளர்களுக்கு பேச்சு பயிற்சி அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

6. நமது மாணவரணியின் சேவைகளை அண்டை மாநிலங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

7. மாநிலத்தில் மாணவரணியின் செயல்பாட்டை அதிக்கப்படுத்த மாநில மாணவரணி செயற்குழுவை இந்த டிசம்பர் மாத இறுதியில் நடத்த மாநில தலைமைக்கு பரிந்துரை செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

பள்ளிகளின் நிர்வாகத்தை அனுகி “தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?” என்ற நிகழ்ச்சியை பள்ளிகூட வளாகத்திலேயே நடத்த மாவட்ட மாணவரணி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் தங்கள் மாவட்டத்தில் அதிகமாக இந்த கல்வி சேவை நிகழ்ச்சி நடத்துவோம் என மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.

முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சியில் முழு அக்கறையோடு செயல்படும் நமது தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி நிர்வாகிகள், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மிகப்பெறிய பொறுப்பை நிறைவேற்ற,

தாங்கள் எதிர் நோக்கி உள்ள சவால்களை சாய்த்து சாதனை நிகழ்த்த தங்களை ஆயத்தபடுத்தி கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேடியவர்களாக கலைந்து சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்!