ஹாஜா மைதீன் படுகொலையில் உண்மைக் குற்றவாளிகளை உடனே கைது செய்! தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த ஹாஜா மைதீன் என்ற இளைஞர் நேற்று சமூக விரோதிகளால் படுகொலை செயப்பட்டுள்ளார்.

அங்கங்களை சிதைத்து மிகக்கோரமான முறையில் நடைபெற்றுள்ள இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

இதுபோன்ற வன்முறைகளால் அமைதிப் பூங்கா எனும் அடைமொழியை தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

தாமதமில்லாமல் எடுக்கப்படும் துரித நடவடிக்கையின் மூலம் தான் நாட்டில் அமைதியையும், பாதிக்கப்பட்டோருக்கு நீதியையும் பெற்றுத்தர முடியும் என்பதால் இவ்வழக்கை விசாரித்து வரும் தமிழக காவல்துறை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, அவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் மூலம் கடும் தண்டனையை அவர்களுக்குப் பெற்றுத்தர வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

மு. முஹம்மது யூசுப்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்