ஹதியா கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஃபாஹில் பகுதியிலுள்ள ஹதியா கிளையில் 18-08-2011 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 19-08-2011 வெள்ளிக்கிழமை அதிகாலை 00.30 மணிக்கு ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் சகோ.அப்துல் கரீம் அவர்கள் “சொல்லும் செயலும்“ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதனைத்தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோ.சிராஜ்தீன் ஃபிர்தௌஸி அவர்கள் “நபிகளாரின் இருதி மூன்று நாட்கள்“ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியை ஹதியா கிளை சகோதரர்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியின் இருதியில் வந்திருந்த அனைவருக்கும் சஹர் உணவும் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் அடங்கிய சொற்பொழிவு சிடியும் வழங்கப்பட்டது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!