ஷார்ஷாவில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

ஷார்ஷாவில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!ஷார்ஷாவில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!கடந்த 03. 07. 09 வெள்ளிக்கிழமை அன்று ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடைபெற்றது.

பிற மத சகோதரர்களின் ஐயங்களைப் போக்கி சமூகத்தில் ஓர் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும் வண்ணம் தமிழ் மக்கள் பரவலாக வாழும் எல்லா இடங்களிலும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. குறிப்பாக அமீரகத்தில் ஆங்காங்கே தொடர்ச்சியாக நடைபெறும் இந்நிகழ்ச்சி இம்முறை ஷார்ஜாவில் நடைபெற்றது.

ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீதின் மர்கஸில் நடைபெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி கடந்த 03-07-09 அன்று மாலை 5.30 மணியளவில் ஆரம்பமானது. இஸ்லாத்தைப் பற்றிய அறிமுக உரையுடன் சகோ. ஹாமீன் இப்றாஹீம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற மத சகோதரர்களுக்கு அறிவு பூர்வமாக பதிலளித்து ஆச்சர்யமளித்தார்கள். வருகையாளர்களின் சவுகரியத்தைக் கருத்தில் கொண்டு இரவு 9.00 மணி வரையுடன் நிறைவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி பல சகோதரர்களுக்கு நேரமின்மையால் வாய்ப்புக் கிடைக்காத சிறு குறையுடன் நிறைவு பெற்றது. எனினும் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிந்து கொண்ட பிற மத சகோதரர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கேள்விகளைக் கேட்ட சகோதரர்களுக்கு திருக் குர்ஆன் தமிழாக்கமும் மேலும் அனைவருக்கும் தேர்ந்தெடுக்க்பட்ட ‘இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்’ நிகழ்ச்சிகளின் டிவிடி க்களும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கான விருந்து வாகன வசதி உட்பட எல்லா வசதிகளையும் ஷார்ஜா மண்டலப் பொறுப்பாளர்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியாக ஷார்ஜா மண்டலத் தலைவர் சகோ. பஷீர் அஹ்மது நன்றியுரையுடன் நிறைவு செய்தார்.