ஷார்ஜா மண்டலத்தில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலத்தின் சார்பாக கடந்த 12-08-2011 அன்று ஷார்ஜா ரோலா மர்க்கஸில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோ.அப்துல் மஜீது உமரி அவர்கள் கலந்து கொண்டு ‘எழுச்சிமிகு ஏகத்துவாதிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ரோலவில் உள்ள ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.