தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலத்தின் ஏர்போர்ட் ஃப்ரீஸோன் கிளையில் கடந்த 22/01/2010 அன்று மாபெரும் ஒருநாள் தர்பியா நிகழ்ச்சி அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக நடைபெற்றது.
காலை 10 மணிக்கு துவங்கிய முதல் அமர்வில் சகோ. கள்ளக்குறிச்சி அக்பர் பாஷா அவர்கள் நபி வழியினை பின்பற்றுவதன் அவசியம் என்ன? எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதனை தொடர்ந்து ஜும்மாவிற்க்கு பின் நடைபெற்ற இரண்டாம் அமர்வில் ஷார்ஜா அவ்காஃபில் பணிபுரியக்கூடிய இமாம் ஷிஹாபுல்லாஹ் அவர்கள் நபி வழி தொழுகை பயிற்சியினை உருதில் வழங்கினார்கள்.
இதன் மொழிபெயர்ப்பினை சகோ. கள்ளக்குறிச்சி அக்பர் பாஷா அவர்கள் செயல்முறையுடன் விளக்கினார்கள். அதன் பின் அஸர் தொழுகைக்கு பின் துவங்கிய மூன்றாம் மற்றும் மஃரிப் தொழுகைக்கு பின் நடைபெற்ற நான்காம் அமர்வில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்ராஹீம் அவர்கள் கலந்து கொண்ட சகோதரர்களின் மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்கள்.
இஷா தொழுகைக்கு பின் நடைபெற்ற இறுதி அமர்வில் அமீரக TNTJ ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்ராஹீம் அவர்கள் அழைப்புப்பணி செய்வதன் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார்கள்.
இந்த தர்பியா முகாமிற்க்கு ஷார்ஜா மண்டல தலைவர் சகோ. இருமேனி ஹனீஃபா அவர்கள் முன்னிலை வகித்தார்கள். ஷார்ஜா ஃப்ரீஸோன் பொறுப்பாளர் சகோ. கள்ளக்குறிச்சி அக்பர் பாஷா அவர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஷார்ஜா ஏர்போர்ட் ஃப்ரீஸோன் கிளை தலைவர் பாம்பே சுல்தான் தலைமையில் கிளை நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த தர்பியா முகாமில் 70க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.