ஷார்ஜாவில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவில் இஸலாத்தை ஏற்ற குடும்பம்

கடந்த 28-01-2011 அன்று ஷார்ஜா TNTJ ரோலா மர்க்கஸில் வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் சிறப்புக்குரியவர்கள் யார்? என்ற தலைப்பில் சகோ.முஹம்மது நாஸர் M.I.Sc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அல்லாஹ்விடத்தில் யார் சிறப்புக்குரியவர்கள் என்று சிறப்பாக விளக்கம் அளித்தனர்.

அதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்ற ஊரை சேர்ந்த முருகேசன் என்கிற பிறமத சகோதரர் தனது குடும்பத்தாருடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

ஷார்ஜா மண்டலத் தலைவர் சகோ.ஹனீபா அவர்கள் அந்த சகோதரருக்கு அல்-குர்ஆன் மற்றும் மார்க்கப் புத்ததகங்களை அன்பளிப்பாக வழங்கினார்.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்தினருக்காக துஆ செய்யப்பட்டது.