ஷார்ஜாவில் நடைபெற்ற நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டல மர்கஸில் கடந்த 02-04-2010 அன்று நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது.

இதில் அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோ.ஹாமின் இப்ராஹிம் சிறப்புடன் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சி இரண்டு அமர்வாக நடைபெற்றது. முதல் அமர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணியுடன் நிறைவுபெற்றது. அடுத்த அமர்வு 2:15 மணியளவில் தொடங்கி 4:15 மணி வரை நடைபெற்றது.

இந்த முகாமில் நிர்வாகம் மற்றும் நிர்வாகிகளின் குணநலன்கள், செயல்திறன், மற்றும் நிர்வாகத்தினை மேம்படுத்தும் விதம் போன்ற ஏராளமான தகவல்களை சகோ.ஹாமின் இப்ராஹிம் சிறப்புடன் விவரித்தார்கள்.

இந்த முகாமில் 30 நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.