ஷார்ஜாவில் நடைபெற்ற திருக்குர்ஆன் கேள்வி பதில் போட்டி!

image5ஷார்ஜாவில் நடைபெற்ற திருக்குர்ஆன் கேள்வி பதில் போட்டி!ஷார்ஜாவில் நடைபெற்ற திருக்குர்ஆன் கேள்வி பதில் போட்டி!நமது சகோதரர்கள் மத்தியில் திருக்குர்ஆன்னுடைய தொடர்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று அதை ஊக்கப்படுத்தும் வண்ணம்; சார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீத் (TNTJ) சார்பாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அதன் கிளையான ப்ரீஸோனில் கடந்த 08-06-2009 ஞாயிரு அன்று திருக்குர்ஆன் கேள்வி பதில் போட்டி மண்டல தலைவர் சகோ. பஷிர் அஹமது முன்னிலையில் நடைப்பெற்றது.

இப்போட்டிக்கான தேர்வினை மண்டல தஃவா அணி செயளாலர் சகோ. ஃபர்மான் அலி மற்றும் துணை செயளாலர் ரசூல் மெய்தீன் இருவரும் இந்நிகழ்ச்சியினை மிக சிறப்பான முறையில் அமைத்திருந்தனர். மேலும் ப்ரீஸோன் கிளை நிர்வாகிகள் சிறப்பான முறையில் நடத்தி முடித்தனர். அத் தேர்வில் சுமார் 30 மேற்ப்பட்ட சகோதரர்கள் போட்டியில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

மேலும் அதில் மற்ற மாநில சகோதரர்களும் நம்முடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான் பங்களாதேசத்தை சேர்ந்த சகோதரர்களும் அத் தேர்வில் கலந்து கொண்டார்கள் அவர்களுக்கு துணை செயளாலர் அக்பர் பாஷா முலம் உருது மொழியில் வினாத்தால்கள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

அத்தேர்வில் வெற்றி பெற்ற சகோதரர்களுக்கு 21-06-2009 அன்று பரிசுகள் வழங்கப்பட்டன.

திருக்குர்ஆனுடைய சிறப்புகள் அதை ஓதுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் திருக்குர்ஆனை நம் வாழ்வில் முழுமையாக நடைமுறைபடுத்துவது குறித்தும் அதனுடனான நம்முடைய தொடர்பு அதிகமாக இருக்க வேண்டும் என்றும் மக்களுக்கு எடுத்து கூறி மேலும் இம்மாதிரியான பணிகள் வருங்காலங்களிலும் நடைபெற துஆ செய்யுமாறு கேட்ட வண்ணம் துஆ வுடன் இந் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.