ஷார்ஜாவில் நடைபெற்ற இரத்த தான முகாம்

pic4pic1 (1)pic2 (1)pic3 (1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலத்தின் சார்பாக 61வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த 29-01-2010 மாபெரும் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இதனை ஷார்ஜா மண்டல TNTJ – ஷார்ஜா இரத்த வங்கியுடன் இனைந்து நடத்தியது.

இந்த முகாமில் அனைத்து தரப்பு மக்களும் எந்த பாகுபாடும் பாராமல் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த சகோதரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு இந்த மனித நேய நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.

இந்த முகாமில் சுமார் 75 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு தனது இரத்தங்களை தானமாக வழங்கினர்.

இந்த முகாம் மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு 8:30 மணி வரை நடைபெற்றது.நேரம் இன்மையால் பல்வேறு சகோதரர்கள் வரிசையில் காத்திருந்தும் இரத்த தானம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த முகாமில் ஷார்ஜா மண்டல TNTJ உறுப்பினர்கள் அனைவரும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்தனர்.

மேலும் இந்த முகாம் நல்ல முறையில் நடைபெற உதவி புரிந்த எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. அல்ஹம்துலில்லாஹ்….