ஷார்ஜாவில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

கடந்த 20-08-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலத்தின் சார்பாக இண்டஸ்டிரியல் ஏரியாவில் உள்ள ETA Emco கேம்பில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மாநில துணைத் தலைவர் சகோ எம்.ஐ. சுலைமான் அவர்கள் அடுத்த கட்டம் என்ற தலைப்பிலும், சகோ. அப்துந் நாசர் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் சத்தியம் எது? அசத்தியம் எது? என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இதில் 175 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயான் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டை ஷார்ஜா மண்டல நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்…