வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு சார்பாக தண்ணீர் தொட்டி (SINTEX)

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட (தரைக்காடு) இஸ்மாயில் நகரில் பெரும்பான்மையான ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு நகராட்சி சீரான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. அதிலும் குடிநீர் வசதி அறவே இல்லாமல் மிகவும் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

அப்பகுதி மக்களின் கோரிக்கையை நகராட்சிக்கு எடுத்து கூறியும் போதிய குடிநீர் வசதி செய்து தர நகராட்சி முயற்சிக்க வரவில்லை.

அதனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளை சார்பாக மறுமையில் நிரந்தர நண்மை எதிர்பார்த்து 350 அடி ஆழ்துளை கிணறு மற்றும் 500 லிட்டர் தண்ணீர் (SINTEX) கேன் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்! அப்பகுதி மக்களுக்கு இது பெரும் உதவியாக அமைந்தது!