வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜுலை 4 ஆலோசனைக் கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம்  சார்பாக பேர்ணாம்படு தவ்ஹீத் மஸ்ஜிதில் ஜுலை 4 ஆலோசனைக் கூட்டம் கடந்த  12-04-2010 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இதில் மாநிலச் செயலாளலர் அப்துர்ரசாக் அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

பின்னர் ஜீலை 4 சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டது.  மாநிலம் முழுவதும் திறந்த வாகனத்தில் மாநில தாயிக்கள்  சூறாவளி பிரச்சாரம் செய்வது, தேசிய நெடுஞ்சாலைகளில் பிளக்ஸ் பேனர் அமைப்பது, பேருந்துகளிலும் தொடர்வண்டிகளிலும் ஸ்டிக்கர் ஒட்டுவது எனப் பல  ஆலோசனை வழங்கப்பட்டது.