வேலூர் குடியாத்தத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்ட குடியாத்தம் நகரில் கடந்த 20.03.2010 அன்று இஸ்லாமிய விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் ‘வரதட்னை ஒரு வன்கொடுமை’ என்ற தலைப்பிலும்  தாவூத் கைஸர் ‘இஸ்லாம் கூறும் சட்டங்கள’ என்ற தலைப்பிலும் உரை நிகழத்தினார்கள்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பயாஸ் அஹ்மத் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஜூபேர் அஹ்மத் முன்னிலை வகித்தார். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி கூறுகையில் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா-வின் பரிந்துரைப்படி அரசுப் பணிகளில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மேலும் இன்ஷா அல்லாஹ் ‘ஜீலை 4’ சென்னை தீவுத்திடலில் நடைபெற இருக்கும் ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாட்டில் 15 இலட்சத்திற்கும் மேலாக முஸ்லீம்கள் குடும்பத்துடன் பங்கேற்பாற்கள் என நம்புகிறோம் எனக் கூறினார்.