வீரவநல்லூரில் ஊர் நீக்கம் செய்யப்பட்ட தவ்ஹீத் சகோதரர்: களமிறங்கிய நெல்லை TNTJ

நெல்லை மாவட்டம் அம்பை வட்டாரம் வீரவநல்லூரில் சுமார் 400 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மலுக்கா மலியர் என்பது ஜும்ஆ பள்ளிவாசலாகும். அப்பகுதியில் உள்ள வீரவநல்லூரைச் சார்ந்த சேக் முகைதீன் அப்துல் காதர் என்ற தவ்ஹீத் சகோதரரை ஊர்நீக்கம் செய்து எந்த தொழிலிலும் செய்ய விடாமலும், யாரிடமும் வேலைக்கும் சேரவிடாமலும் முடக்கி வைத்துள்ளனர்.

இதன் காரணமாக சேக் முகைதீன் அப்துல் காதரின் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தவ்ஹுத் சகோதர் சேக் முகைதீன் அப்துல் காதர் சுபுஹ் தொழுகைக்கு மலுக்காமலியர் ஜும்ஆ பள்ளிவாசலில் தொழச் சென்றபோது தொப்பி அணியாமல் தொழுதார் எனக் கூறி பீமா ஜுவல்லர்ஸ் அஸ்ரப், ஆதம் இலியாஸ், மு.ஆ. சாகுல் ஹமீது, புகாரி, முகம்மது அலி ஜின்னா என்ற 5 நபர்கள் சேக் முகைதீன் அப்துல் காதர் அவர்கள் மீது கடுந்தாக்குதல் நடத்தினார்கள்.

இத்தகவல்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்ட தலைவர் யூசுப் அலீ அவர்களுக்கு கிடைத்தவுடன் யூசுப் அலீ அவர்கள் உடனடியாக காலை 7 மணியளவில் மாவட்ட  S.P அஷ்ராகார்க் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விளக்கி கூறினார்.

தாக்கப்பட்ட சகோதரர் சேக் முகைதீன் அப்துல் காதர் அவர்கள் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது FIR போடப்பட்டது.

இந்நிலையில் பீமா ஜுவல்லர்ஸ் அஸ்ரப் ADMK செல்வாக்குள்ளவர். தனது அரசியல், பணபலத்தை பயன்படுத்தி வீரவநல்லூர் தவ்ஹீத் சகோதரர் சேக் முகைதீன் அப்துல் காதர் மீதும், அவரது குடும்ப பரிதாப நிலையைக் கண்டு உதவிய வெளிநாட்டு சகோதரர்கள் 2 பேர் மீதும் 506/2 வழக்கு (Non – Bailable Section) போடப்பட்டது.

இதையறிந்த TNTJ  மாவட்ட தலைவர்  யூசுப் அலீ, மாவட்ட செயலாளர் செய்யதலீ, மாவட்ட பொருளாளர் நேஷனல் ஷாகுல் ஆகிய மூவரும் நேரிடையாக மாவட்ட S.P. அஷ்ராகார்க்கை பார்த்து பாதிக்கப்பட்டவரும், பாதிப்பை ஏற்படுத்தியவர்களும் ஒன்றா எனக் கேட்டு நடந்ததை விரிவாக எடுத்துக் கூறி நாங்கள் அல்லாஹ்விற்கு பயந்து உண்மையை கூறுகிறோம். நாங்கள் நினைத்தால் தாக்குதல் நடத்திய 5 நபர்கள் மீதும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யச் சொல்லலாம். ஆனால் தேவையில்லை, எங்கள் ஜமாஅத் சகோதரர்கள் மீது போடப்பட்ட 506/2 வழக்கை வாபஸ் பெற்றால் போதும் என வலியுறுத்தினார்கள்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் எந்த கோர்ட்டுக்கும் செல்லாமல், வக்கீலையும் அனுகாமல் 506ஃ2 கேஸை மாவட்ட நிர்வாகிகள் முறியடித்தனர் அல்ஹம்துலில்லாஹ்!.

மேலும் சேரன் மகாதேவி S.P. தங்கதுரை அவர்களை மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து மவ்லவி P.J. அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை வழங்கி இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை எடுத்துக் கூறியும், தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார்கள்.

இதன் பிறகு பீஸ் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது!

பேச்சுவார்த்தையின்போது சுன்னத் ஜமாஅத்தினர் 30 வருடங்களாக இந்த ஊரில் நாங்கள் எங்கள் முன்னோர்களின் வழிமுறையை பின்பற்றி தொழுது வருகின்றோம். ஆனால் TNTJ தரப்பினர் தற்போது ஊரில் பிரச்சனை செய்து வருகின்றனர் என்று தெரிவித்தனர். TNTJ தரப்பில் மாவட்ட தலைவர் யூசுப் அலி அவர்கள் எங்கள் ஜமாஅத் உறுப்பினர் சேக் முகைதீன் அப்துல் காதர் அவர்களை இவ்வூர் ஜமாஅத்தினர் கடந்த 8 மாதங்களாக ஊர் நீக்கம் செய்து வைத்துள்ளனர்.

யாரும் இவரை வேலைக்கு சேர்க்க கூடாது எனவும் உத்தர விட்டுள்ளனர். தற்போது நாங்கள் தான் இவருக்கு வேலை கொடுத்து அவரது குடும்பத்திற்கு உதவி செய்து வருகின்றோம். மேலும் வீரவநல்லூரில் TNTJ சார்பாக வரதட்சனை ஒழிப்புப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருக்கின்றோம். இந்நிலையில் பள்ளிவாசலில் தொழும் பிரச்சனை சம்பந்தமாக மாவட்ட தலைவர் யூசுப் அலி அவர்கள் தாசில்தார் அவர்களிடம் பள்ளிவாசல் என்பது தொழுவதற்குரிய பொதுவான இடம் அதில் யார் வேண்டுமானலும் எப்படி வேண்டுமானலும் தொழுது கொள்ளலாம், யாரும் யாரையும் தடுக்கக் கூடாது. இது சம்பந்தமாக பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன என்றும் விளக்கிக் கூறினார்.

பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு பள்ளிவாசலை பராமத்து செய்வது, மின்சார கட்டணம் செலுத்துவது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது ஆகியவை மட்டுமே பொறுப்பாகும். தொழுகை விஷயத்தில் தலையிடுவதற்கு நிர்வாகிகளுக்கு உரிமையில்லை என்றும் விரிவாக எடுத்துக் கூறினார்.

இறுதியில் அம்பை தாசில்தார் சங்கரன் அவர்கள் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொழுது கொள்ளலாம் என்றும், இருதரப்பினருக்கும் இடையே R.D.O விசாரனை நடைபெறும் வரை தற்போது உள்ள நிலையே தொடரும் என்றும் எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்!