வீதியில் இறந்து கிடந்த உடலை உறவினரிடம் ஒப்படைத்த வலங்கைமான் TNTJ

2501201004825012010052தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் நேற்று (25-1-2010) அதிகாலை குத்தூஸ் என்ற சகோதரர் வலங்கைமான் மாரியம்மன் கோவில் அருகில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த கோவில் பூசாரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலங்கைமான் கிளை சகோதரர்களை தொடர்புக் கொண்டு தகவலை தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் கிளை சகோதரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு சென்றனர். பிறகு அவருடைய சட்டையில் இருந்த டெலிபோன் டைரியில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டு பேசுகையில் கும்பகோணம் அருகில் உள்ள அரியதிடல் கிராமத்தை சார்ந்தவர் எனத் தெரிய வந்தது உடனே உறவினர்களை வரவழைத்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்து ஆம்புலன்சுக்கு உள்ள தொகையையும் கொடுத்து அனுப்பினர்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மாற்று மத சகோதரர்கள் நம் சகோதரர்களை பாரட்டினார்கள்.