விழுப்புரத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ சிகிச்சை முகாம்!

விழுப்புரத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ சிகிச்சை முகாம்!விழுப்புரத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ சிகிச்சை முகாம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம், புதுவை மருத்துவ விஞ்ஞான நிறுவனத்துடன் இணைந்து கடந்த 30-7-2009 அன்று மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்தியது. இம்முகாமில் மேல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் இலவசமாக பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யபட்டது.

தோல், காது, மூக்கு, தொண்டை போன்ற எல்லா விதமான நோய்களுக்கும் சிகிச்சைக்கான பரிசோதனை செய்யபட்டது.

ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்!