“விருந்தோம்பல்” கத்தர் மர்கஸ் பயான்

கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 22-03-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைச்செயலாளர் சகோதரர், அப்துல் பாசித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டலப் பேச்சாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம், அவர்கள் “விருந்தோம்பல்” என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டலப் பேச்சாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் “நபிகளாரின் இறுதி நாட்கள் தரும் படிப்பினை”என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் ” இறுதிப் பயணம் ” என்ற தொடர்தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும்,செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரவு உணவு உண்டபின் ,இலங்கை சகோதரர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் தலைமையில் நடந்தது.