விமான டிக்கட் உதவி – குவைத்

குவைத்தில் வீட்டு டிரைவராக வேலை பார்க்கும் சென்னையை சேர்ந்த சகோ அப்துல் ரஹ்மான் குடும்ப வறுமை காரணமாக தனது மனைவியையும் தன்னுடன் வீட்டு வேலை செய்ய ஒரு ஏஜன்டடை நம்பி குவைத் வரவழைத்து விட்டார்.

ஆனால் இங்கு குவைத் வந்து பார்த்த அவருடைய மனைவிக்கு குவைத்திகளின் நடவடிக்ககை பிடிக்காமல் தாயகம் செல்ல அந்த ஏஜன்டிடம் சொன்போது அவன் பாஸ்போர்ட் தராமல் ஏற்கனவே பணம் கொடுத்து விசா எடுத்த சகோதரரிடம் மேலும் 600 தினார் கொடுக் வேண்டும் என்று கூறியுள்ளான்.

இதனால் மனம் நொந்த அந்த சகோதரர் இந்திய எம்பாஸியை அனுகியுள்ளார். இந்திய எம்பாஸியோ எப்படியோ பாஸ்போர்ட் மட்டும் வாங்கி கொடுத்துள்ளனர். அவர் செய்வதறியாது தவிர்த்த குவைத் TNTJ வை அனுகியதும் அவருக்கு கடந்த 27-07-2012 வெள்ளிக்கிமை இந்திய ரூபாய் சுமார் 10000 (பத்தாயிரம்) கொடுத்து அவரது மனைவி தாயகம் செல்ல குவைத் TNTJ உதவியது. அல்ஹம்துலில்லாஹ்