வாராந்திர ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல மர்கசில் கடந்த 4-8-2011 அன்று சுமார் 11 மணியளவில் வாராந்திர ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆரம்பகட்டமாக, நமது மண்டல ஆலோசகர் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் அறிய பணி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி, அதில் நமது ஜமாஅத் செய்யும் செயல்பாடுகள் பற்றியும் விளக்கி கூறினார்.

அதை தொடர்ந்து தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் இஸ்லாமிய அடிப்படை கல்வி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அந்த உரையை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சுமார் அதிகாலை 2 மணியளவில் நிறைவுபெற்றது. இதன் பிறகு ஸஹர் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!