வாணியம்பாடியில் நடைபெற்ற இனிய மார்க்கம் – உருது பத்திரிக்கை செய்தி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் கடந்த 26.06.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் கேள்வி கேட்ட அனைவருக்கும் ரியாத் மண்டலம் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

பரவலாக முஸ்லிம்கள் வாழக்கூடிய மாவட்டமாகவும், பெரும்பான்மை முஸ்லிம்கள் உருது மொழியை தாய் மொழியாக கொண்ட மாவட்டம் வேலூர் .

இந்த மாவட்டத்தில் தமிழ் மொழியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதை பெங்களுரிலிருந்து வெளிவரும் பிரபல உருது நாளிதழான ராஷ்டிரய சஹாரா கடந்த 27.06.2011 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.

செய்தியின் தமிழாக்கம்

தவ்ஹீத் ஜமாஅத் தமிழ்நாட்டில் முஸ்லிமல்லாத மக்களிடம் இஸ்லாத்தைப்பற்றி பரவி இருக்கும் தவறான கருத்துக்களை போக்கும் முயற்சியில் நெடுங்காலமாக இருந்து வருகிறது.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் முஸ்லிமல்லாத மக்களிடம் இஸ்லாத்தைப்பற்றிய தவறான கருத்துக்களை போக்கும்(இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்)  பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, வாணியம்பாடி பாரத் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்றனர்.  இதில் கணிசமானோர் முஸ்லிமல்லாதவர்கள்.

அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டின் படி முஸ்லிமல்லாத சகோதரர்களின் எண்ணிக்கை இர நூறுக்கு மேலாக இருந்தது.  இதில் முஸ்லிமல்லாத பெண்கள் கணிசமானோர்.  கேள்வி கேட்டோரிலும் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.  முஸ்லிம் அல்லாத மக்களிடையே இஸ்லாத்தைப்பற்றி அறிந்து கொள்ள காணப்பட்ட ஆர்வம் மிகவும் மகிழ்ச்சியளித்தது.

இது வரைக்கும் வாணியம்பாடி நகரில் முஸ்லிமல்லாத மக்களிடம் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வது இயலாத காரியம் என எண்ணப்பட்டு வந்தது. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த நிகழச்சிக்கு பிறகு, சிறிய சிறிய நகரங்களிலும் இஸ்லாத்தைப்பற்றி அறிந்து கொள்வதின் ஆர்வமும், இஸ்லாத்தைப்பற்றி தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை போக்கி கொள்ளும் முஸ்லிமல்லாத மக்களின் எண்ணமும் இருந்ததை காண முடிந்தது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் அவர்களே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். ஒவ்வொரு கேள்விக்கும் முழுமையான பதிலை அவர் தந்ததால், கேள்வி கேட்டவர்களுக்கு மன நிறைவை தந்தது. உதராணமாக ராஜ் பரத் என்பவர், கடவுள் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாக இருந்தால், அவன் ஏன் ஏழை மற்றும் ஊனமுற்றோர்களை படைத்தான் ? என்கிற கேள்விக்கு பதிலளிக்கையில், இப்படி ஏற்றத்தாழ்வுகளை கடவுள் படைக்கவில்லையென்றால் உலகம் சின்ன பின்னமாகியிருக்கும் எனவும், எல்லோரும் செல்வந்தர்களாக இருந்தால் யாரும் கட்டிட வேலை செய்ய மாட்டார்கள், பெரும் கட்டிடங்களை கட்ட இயலாது, தொழிலாளிகள் இல்லாமல் இருந்தால் தொழில் நிலையங்கள் இயங்காது, ஒருவர் மற்றொருக்கு உதவி செய்வதற்காகவும், தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும், கடவுள் இந்த ஏற்றத்தாழ்வை படைத்தார். இந்த ஏற்றத்தாழ்வுடன் படைத்திருப்பது ஒரு பரஸ்பர உதவி செய்யும் திட்டமாகும். உலகத்தில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் ஊனமானவர்கள் தான். யாரும் தான் முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூற முடியாது. ஏனெனில் தலை வலி ஏற்படுவதும், அதன் மூலம் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதும் ஒரு வித ஊனம் தான். இதைப்போல பல வியாதிகளை மனிதனை தாக்கி ஊனமாக்கி, அவன் வேலை செய்வதை விட்டும் ஊனமாக்குகின்றன.   ஊனம் எல்லோருக்கும் ஏற்படும். ஒருவர் மற்றவரின் கஷ்டத்தை உணருவதற்காக ஊனம் படைக்கப்பட்டுள்ளது. ஒரு கையை இழந்தவர், இரு கைகளை இழந்தவரின் நிலையை சிந்தித்து பரிதாப்படுவதற்காகத்தான் ஊனம் படைக்கப்பட்டுள்ளது என ஜெய்னுல் ஆபிதீன் தன்னுடைய பதிலில் குறிப்பிட்டார்.

இதற்கு பிறகு ஜிஹாதை பற்றியும், இஸ்லாம் தீவிரவாதத்தை அனுமதிக்கிறதா எனவும் ஒரு சகோதரி கேள்வி கேட்டார்.  இதற்கு பதிலளித்த ஜெய்னுல் ஆபிதீன், இஸ்லாத்தில் தீவிரவாதம் என்கிற வார்த்தையே இல்லை, முஸ்லிம் நாடுகளில் நடக்கும் சண்டைகள் உரிமை போராட்டங்களே எனவும், பாகிஸ்தானில் தினந்தோறும் குண்டு வெடித்தாலும் அதனால் கொல்லப்படுவது முஸ்லிம்கள் தான், இதே நிலை தான் ஈராக்கிலும் இருக்கிறது. இந்த நாடுகளில் போராடுபவர்கள் அவர்களின் போராட்டங்களை இஸ்லாமிய போர் என குறிப்பிடுவதில்லை எனவும், இஸ்லாமிய மார்க்கம் முழுக்க முழுக்க சாந்தியையும், அமைதியை விரும்பும் மார்க்கம் எனவும், இதில் தீவிரவாதத்திற்கு அறவே இடமில்லை என குறிப்பிட்டார்.

மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. இதில் கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவர்களும் கலந்து கொண்டனர்.  காலையில் பத்து மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மதியம் இரண்டு மணி வரை நடைபெற்றது.