வழுத்தூரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

DSC00163DSC00156தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளை சார்பாக 07.02.10 ஞாயிற்றுக் கிழமை அன்று கீழத் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ:சைய்யது சுல்தான் அவர்கள் இணை வைப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார், கிளைப் பொருளாளர் இப்ராஹீம், கிளை து.செயலாளர் ஜாசிம், கிளை உறுப்பினர் நபில், மற்றும் கிளை உறுப்பினர் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக கிளை உறுப்பினர் சாகுல் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.