வழுத்தூரில் நடைபெற்ற சர்க்கரை நோய் மருத்துவ முகாம்

DSC00241DSC0023914022010தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த 14-2-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது.

இதில் ரஜியா கிளீனிக் மருத்துவர் ரஜ்ஜாக் ஜானி M.B.,G.D.Diab.,(Aust) அவர்கள் சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி, வந்தவுடன் என்ன செய்வது, அதன் பின்விளைவுகள் யாவை என விரிவாக விளக்கமளித்தார்.

இதைத் தொடர்ந்து மக்கள் சர்க்கரை நோய் சம்பந்தமான சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட து.செயலாளர் குலாம் அவர்கள் தலைமை தாங்கினார், கிளைச் செயலாளர் அப்துல் காதர், கிளைப் பொருளாளர் முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியின் இறுதியாக கிளைத் தலைவர் முஹம்மது கவுஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.