“வழி தவறும் பெண்களும்,அதன் தீர்வும்” அந்தலூஸ் கிளை சிறப்பு பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் குவைத் மண்டலம் அந்தலூஸ் கிளை ஏற்ப்பாடு செய்திருந்த மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 11-11-11 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழகைக்கு பிறகு அந்தலூஸ் ஏரியா ஐந்தில் உள்ள ஜும்மா பள்ளியில் நடைபெற்றது.

மாதம் ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் “வழி தவறும் பெண்களும்,அதன் தீர்வும்” என்ற தலைப்பில் குவைத் மண்டல செயலாளர் சகோதரர் கூத்தாநல்லூர் ஜின்னா அவர்கள் உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை அந்தலூஸ் கிளை நிர்வாகிகள் கவனித்துக் கொண்டனர். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.