வலங்கைமான் கிளையில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கம்!

3 (4)4 (4)2 (10)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 21.02.10 ஞாயிற்றுக்கிழமை அன்று வலங்கைமான் TNTJ மர்கஸில் கல்வி கருத்தரங்கம் நடை பெற்றது.

இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் N.முஹம்மது ஹாரிஸ் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட  து. செயலாளர் A.ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார், கிளைத் தலைவர் M.முஹம்மது ரியாஜ், கிளைச் செயலாளர் P.முஹம்மது ஹசன் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியின் இறுதியாக சகோ:M.முஹம்மது ஆசிக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

இதில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.