தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் இந்திய குடியரசு தினத்தன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார்,
சிறப்பு அழைப்பாளராக சகோ.ஜெயபால் அவர்கள் (காவல் துறை ஆய்வாளர் வலங்கைமான்) கலந்துக் கொண்டார்,
மாவட்ட தொண்டரனிச் செயலாளர் சுவாமிமலை ஜாபர், மாவட்ட மாணவரனிச் செயலாளர் முஹம்மது ஹாரிஸ், கிளைத் தலைவர் முஹம்மது ரியாஜ், கிளைச் செயலாளர் ஹசன் பாருக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
இந்நிகழ்ச்சியில் காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கு மாவட்ட பொருளாளர் நுஃமான் அவர்கள் கிளை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கினார்கள்.
முஹம்மது யஹ்யா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இம்முகாமில் ஆண்கள், பெண்கள் பிற மத சகோதர, சகோதரிகள், மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் கிளை உறுப்பினர்கள் என 50 பேர் இரத்தம் கொடுத்தனர்.