வலங்கைமான் கிளையில் ஜுலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 05.06.10 சனிக்கிழமை அன்று விருப்பாட்சிபுரம் கடைத் தெருவில் ஜூலை 4 விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் R.முஹம்மது இலியாஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார். கிளை பொருளாளர் ஹசன் பாரூக் அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை செயலாளர் ஆசிக் அப்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.