வலங்கைமான் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 15.05.11 ஞாயிற்றுக்கிழமை அன்று இரத்ததான முகாம் நடைப்பெற்றது.

இதில் 32 பேர் இரத்தம் கொடையளித்தனர். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக வலங்கைமான் காவல் ஆய்வாளர் M.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு முகாமை துவங்கி வைத்தார்.