வலங்கைமானில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 09.05.10 ஞாயிற்றுக்கிழமை அன்று செந்தமிழ் நகர் அப்துல் முத்தலிப் இல்லத்தில் பெண்களுக்கான கேள்வி, பதில் நிகழ்ச்சி மற்றும் மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: நவ்சாத் பேகம் அவர்கள் அல்லாஹ்வுக்கு நாம் காட்டுப்பட்டோமா என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

சகோதரி: சபுர் நிசா ஆலிமா அவர்கள் மார்க்க சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இந்நிகழ்ச்சிக்கு மூன்று மாத பயிற்சி மாணவி பாஸ்மா அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக மூன்று மாத பயிற்சி மாணவி அஸ்ரப் நிசா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.