வலங்கைமானில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 26.03.10 சனிக்கிழமை அன்று சேணியர் தெரு சகோ:A.ரியாஸ் முஹம்மது அவர்கள் இல்லத்தில் பெண்களுக்கான மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு இரண்டாம் ஆண்டு மாணவி சகோதரி:நவாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். சகோதரி:சபுர் நிசா ஆலிமா அவர்கள் வெட்கம் என்ற தலைப்பிலும், சகோதரி:நிரோஸ் பானு ஆலிமா அவர்கள் பெருமை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி பதரியா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.