வருத்தம் தெரிவித்த மதுரை ஆதீனம்

aadinamகாஞ்சி சங்கராச்சாரியாரின் 75வது பிறந்த நாள் விழா திருச்சியில் நடைபெற்றது. அவ்விழாவில் மதுரை ஆதீனம், “காஞ்சி சங்கராச்சாரியார், நபிகள் நாயகத்தின் அவதாரம்” என்று பேசிய செய்தி நக்கீரனில் 26-12-2009 இதழில் வெளியானது.

இதனை அறிந்து அதிர்ச்சியுற்ற நாம் நக்கீரன் அலுவலகத்தை தொடர்பு கொண்டோம். மதுரை ஆதீனம் நீங்கள் குறிப்பிட்டவாறு நபிகள் நாயகத்தை காஞ்சி சங்கராச்சாரியாரின் அவதாரம் என்று சொன்னது ஆதாரப்பூர்வமான செய்தியா? அல்லது உங்களது பத்திரிகையில் தவறுதலாக வெளியிட்டு விட்டீர்களா? என்று விளக்கம் கேட்கப்பட்டது.

மேலும் மதுரை ஆதீனம் சொல்லாத செய்தியை நீங்கள் தவறுதலாக வெளியிட்டிருந்தால் அதற்கு வரக்கூடிய வாரத்தில் மறுப்பு வெளியிடப்படாவிட்டால் முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய நபிகள் நாயகத்தை நீங்கள் இழிவுபடுத்தியதற்காக சட்டரீதியாகவும் போராட்டங்கள் வாயிலாகவும் கண்டனக்கணைகள் நக்கீரன்’ மீது பாயும் என்று சொன்னதைத் தொடர்ந்து,

“மதுரை ஆதீனம் அவ்வாறு பேசியது உண்மைதான். அதற்குரிய ஆதாரம் நம்மிடம் சி.டி.யாக உள்ளது என்ற விஷயத்தை நக்கீரன் தரப்பு நமக்கு தெரிவித்தது. (அது குறித்து மதுரை ஆதீனம் பேசிய ஆதாரங்களோடு நக்கீரன் 31-12-2009 இதழில் கிறிஸ்தவ – முஸ்லிம் மதங்களோடு மோதும் மதுரை ஆதீனம் என்ற தலைப்பில் நக்கீரன் விரிவாக செய்தி வெளியிட்டது.

அதில் மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்று மதுரை ஆதீனம் சொன்ன விஷயங்களும் ஆதாரத்துடன் விவரிக்கப்பட்டிருந்தன.)

அதைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேலும் மதுரை ஆதீனம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வயுறுத்தி, 28-12-2009 திங்கள் அன்று மதுரை மாவட்டம் மற்றும் புறநகர் முழுவதும் கண்டன போஸ்ட்டர்களை டிஎன்டிஜேயினர் ஒட்டினர். மேலும் இது தொடர்பாக மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வயுறுத்தி மதுரை மாநகர ஆணையாளரிடத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. மேலும் உடனே மதுரை ஆதீனம் இதற்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால் 01-01-2010 வெள்ளிக்கிழமை அன்று மதுரை ஆதீனத்தின் மடத்தை முஸ்ம்கள் முற்றுகையிடுவோம் என்ற போராட்ட அறிவிப்பும் ஆணையாளரிடத்தில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்டது.

மேலும் புத்தாண்டு அன்று காவல் துறை பல பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டி ருப்பதால் 02-01-2010 அன்று முற்றுகையை வைத்துக் கொள்ளுங்கள் என்ற காவல்துறை உயர் அதிகாரிகளின் வேண்டு கோளை ஏற்று, 31-12-2009 அன்று கூடிய மதுரை மாவட்ட டிஎன்டிஜேவின் அவரச செயற்குழுவில் 02-01-2010 அன்று காலை 11 மணிக்கு மதுரை விளக்குத்தூண் அருகில் அமைந்துள்ள மதுரை ஆதீனத்தின் மடத்தை முற்றுகையிடுவது என்று வெடுக்கப்பட்டு போராட்ட செய்தி காட்டுத்தீபோல் மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் பரவ மதுரை மாவட்டம் டென்ஷனில் பரபரப்பானது.
தான் பேசிய தவறான பேச்சுகளுக்காக தனது மடத்தை முஸ்ம்கள் முற்றுகையிடப் போகின்றனர் என்பதையறிந்த மதுரை ஆதீனம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ள பல வழிகளில் முயற்சித்து மாநிலத் தலைமையகத்தை தொடர்பு கொண்டார். டிஎன்டிஜே மாநிலச் செயலாளர் சையது இப்ராஹிமை போனில் தொடர்பு கொண்டு பேசிய மதுரை ஆதீனம், “நான் பத்திரிகைக்கு அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளேன்.

என்னுடைய அறிக்கையை ஏற்று போராட்டத்தை நீங்கள் விலக்கிக் கொள்ள வேண்டும்…” என்று கோரிக்கையை முன் வைத்தார். “எங்களது உயிரினும் மேலான நபிகள் நாயகத்தின் அவதாரமாக காஞ்சி சங்கராச்சாரியாரை ஒப்பிட்டு நீங்கள் பேசி யதால் முஸ்லிம் சமுதாயம் பெரும் கொந்தளிப்பில் உள்ளது.

எனவே அதற்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும்; இல்லையென்றால் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகிகளி டமும் நீங்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் நாம் கூறியவுடன், “1500 வருடமாக இந்த மடத்தை நடத்தி வருகிறார்கள். இதில் ஆதீனமாக இருக்கக் கூடிய நான் மன்னிப்பு’, வருத்தம்’ என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவது இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு எதிரானது… எனவே எப்படியாவது இந்த போராட்டத்தை வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள்…” என்று மிகவும் கீழ்நிலையில் இறங்கி வந்து கெஞ்சாத குறையாக நம்மிடத்தில் கேட்டார். வருத்தம் தெரிவிப்பதே மருந்து
“இந்த அளவுக்கு கீழ்நிலையில் இறங்கி வந்து நீங்கள் கேட்டாலும், கொந்தளிப்பில் உள்ள முஸ்லிம் சமுதாயம் வருத்தம் தெரிவித்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ளும்; இல்லையேல் முற்றுகைப் போராட்டம்தான்…”
என்றும் “நீங்கள் ஏற்படுத்திய காயத்திற்கு நீங்கள் வருத்தம் தெரிவிப்பதே மருந்தாகும்…” என்றும் நாம் கூறியதைத் தொடர்ந்து, அப்படியானால் மதுரை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து அந்த வாசகங்கள் அடங்கிய கடிதத்தை நேரில் வழங்குவதாகவும், அவர்களை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் மதுரை ஆதீனம் கேட்டுக் கொள்ள, மதுரை மாவட்ட நிர்வாகிகளுடைய செல்பேசி எண்களை மதுரை ஆதீனம் தரப்பிற்கு வழங்க, மறுகணமே அவர்களுக்கு அழைப்பு பறக்க, கூடுதலாக காவல் துறை தரப்பிலும் மதுரை ஆதீனம் தரப்பிடம் தொடர்பு கொள்ள, உடனடியாக மதுரை மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்ட உளவுத்துறை துணை கமிஷனர் குமரவேல், “சுமூகமான உடன்பாட்டை எட்டி விடலாம். அவர் வருத்தம் தெரிவிப்பார்…” என்ற வாக்குறுதியோடு அவரது தலைமையில் பி1 காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் அவர்களோடு மதுரை ஆதீனம் நம்மை நேரில் சந்தித்தார். மறுபடியும் பல்டியடித்து பிறகு வருத்தம் தெரிவித்த ஆதீனம் :

மாநிலத் தலைமையகத்தை தொடர்பு கொண்டபோது, தான் பேசியது உண்மை என்பதை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்த மதுரை ஆதீனம், டிஎன்டிஜே மதுரை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மறுபடியும் நான் அப்படி பேசவில்லை என்று மறுத்து மறுபடியும் அந்தர்பல்டி அடித்துள்ளார். பின்னர் அதற்குரிய ஆதாரம் உள்ளதாக டிஎன்டிஜே நிர்வாகிகள் கூற, அவரது கைப்பட அவரது கையாலேயே “நான் உரையாற்றியதில் இஸ்லாமிய சகோதரர்களின் மனம் புண்பட்டிருந்தால் நமது மனமும் புண்பட்டதாகவே உணருகிறோம். உலகில் மனிதனாகப் பிறந்த எவரும் இதற்கு முன்பும், இன்றும், இனியும் இறைத்தூதர் நபிகள் நாயகத்திற்கு ஈடாக முடியாது. இவ்வுலகில் எவரும் நபிகள் நாயகம் அவர்களின் அவதாரமாக ஆக முடியாது என்பதில் எமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை…” என்று தெள்ளத் தெளிவாக தெளிவான வார்த்தைகளில் எழுதி அந்தக் கடிதத்தை மதுரை மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகளிடம் வழங்கினார்.

அவர் கைப்பட எழுதிய அந்த வீடியோ காட்சிகளும், அதை அவர் எழுதிவிட்டு அவரே வாசித்து காண்பித்த காட்சிகளும் வீடியோவில் பதிவு செய்யப் பட்டு ஆதாரமாக நம்மிடம் உள்ளது.

அவர் எழுதிய கடிதத்தில், “மேலும் நாம் உரையாற்றியதில் இஸ்லாமியர்களின் மனம் புண்பட்டிருந்தால்…” என்று அவர் எழுதியதன் மூலம், தான் தவறாகப் பேசியதை ஒப்புக் கொண்டார். “என் மனமும் புண்பட்டதாகவே உணருகிறோம்…” என்று எழுதியதன் மூலம் தனது வருத்தத்தையும் தெரிவித் துள்ளார்.

நபிகள் நாயகத்துக்கு இணையாக இதற்கு முன்பும், இன்றும், இனியும் மனிதனாக பிறந்த எவரும் ஈடாக முடியாது; இவ்வுலகில் எவரும் நபிகள் நாயகத்தின் அவதாரமாக ஆக முடியாது…” என்று எழுதித் தந்ததன் மூலம், தான் ஏற்கெனவே பேசிய தவறான பேச்சுக்கு பிராயச்சித்தமும் தேடிக் கொண்டார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மேலும் நாம் உரையாற்றியதில்’ என்ற பத்திக்கு முன்பாக உள்ளதுவரை அவரது உதவியாளரால் எழுதப்பட்ட வாசகங்கள் அந்த வரிகளில், “நான் யார் மனதையும் எந்த மதத்தையும் குறைவாகப் பேசவில்லை…” என்ற பொருளில் எழுதியிருந்ததை காவல் துறை உயர் அதிகாரிகள் உள்பட அனைவரும் தவறு என்று சுட்டிக் காட்டியவுடன் அவரது கைப்படவே வருத்தம் தெரிவித்த வாசகங்களையும், தான் பேசியதை ஒப்புக் கொள்ளும் வாசகத்தையும் மதுரை ஆதீனம் எழுதினார். கொள்கை உறுதியை வெளிப்படுத்திய டிஎன்டிஜேவினர் :

ஆதீன மடத்தில் மதுரை ஆதீனத்தின் அழைப் பின் பெயரில் காவல் துறை அதிகாரிகளின் வேண்டு கோளை ஏற்று அங்கு சென்ற மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகளிடம் மதுரை ஆதீனத்தின் உதவியாளர் பாலைக் கொண்டு வந்து ஆதீனத்திடம் வழங்க அதை ஆசீர்வதிக்கும் விதமாக ஆதீனம் சைகை காட்ட அது டிஎன்டிஜேயினரிடம் வழங்கப்பட்டபோது, “இந்தப் பாலை நாங்கள் அருந்த மாட்டோம்…” என்று கூறி நமது நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.

அதற்கு மதுரை ஆதீனத்தின் உதவியாளர், “இது சாமியாரின் ஆசீர்வாதம் பெற்ற பாலாயிற்றே! இதையா மறுக்கிறீர்கள்…?” என்று கேள்வி எழுப்பியவுடன், “ஆசி வழங்கிய பால் என்பதால்தான் அதை நாங்கள் மறுக்கிறோம். சாதாரண பாலாக இருந்தால் அருந்தியிருப்போம். பூஜை செய்யப்பட்ட உணவுகள் எங்களுக்கு தடுக்கப்பட்டது…” என்று கூறியவுடன் அதைக் கண்டு மதுரை ஆதீனம் வியந்துள்ளார்.

ஓட்டு கேட்கப் போகிறேன் என்று போய், திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஆசி வாங்கிய கீழ்த்தர தலைவர்கள் மத்தியில் டிஎன்டிஜேவினரின் கொள்கை உறுதி, மதுரை ஆதீனத்தையும் வியக்க வைத்துள்ளது. அல்ஹம்துல்லாஹ்…

மதுரை ஆதீனத்தின் கடைசி கோரிக்கை :

வருத்தம் தெரிவித்த கடிதத்தை டிஎன்டிஜே நிர்வாகிகளிடம் மதுரை உயர் அதிகாரிகள் முன்னிலையில் வழங்கிய மதுரை ஆதீனத்திடம், “நான் பேசவே இல்லை என்று கூறி அதை மறுத்த நீங்கள், தற்போது அதற்கு ஒப்புக் கொண்டு, வருத்தம் தெரிவித்து கடிதம் தரக்கூடிய அளவுக்கு உங்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்…” என்று கூற, உடனிருந்த நமது நிர்வாகிகள் “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் முழங்க, கடைசியாக ஒரு கோரிக்கையை மதுரை ஆதீனம் டிஎன்டிஜே நிர்வாகிகளிடம் வைத்தார். “நான் வருத்தம் தெரிவித்து கொடுத்த இந்த கடிதத்தையும், தற்போது வீடியோ பதிவு செய்த காட்சிகளையும் பெரியளவில் விளம்பரப்படுத்தி பெரிதுபடுத்திவிட வேண்டாம்…” என்று கேட்டுக் கொண்டார்.

நிராகரிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் கோரிக்கை :

அதற்கு டிஎன்டிஜே நிர்வாகிகளோ “நீங்கள் பேசிய விஷயம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்க இதை மறைத்து வைக்க முடியாது. நாங்கள் எங்களது தொலைக் காட்சியில் ஒளிபரப்புவோம்; முஸ்ம்களிடத்தில் கொண்டு செல்வோம்…” என்று சொல்விட்டு, “உங்களை இறைவன் நேர்வழியில் செலுத்தவும், உங்களுக்கு நேர்வழி கிடைக்கவும் நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்…” என்று கூறி அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

மதுரை ஆதீனம் வருத்தம் தெரிவித்ததன் காரணமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்ட செய்தி மறுநாள் செய்தித்தாள்களில் வெளியானது.

கழன்று விழுந்த பொய்யர்களின் பொய் முகம் :

உண்மை நிலவரம் இவ்வாறிருக்க, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தைவிட, தங்களது அமைப்பின் பெயரும், புகழுமே மேலோங்க வேண் டும் என்று நினைத்த பொய்யர்கள் சிலர் “மதுரை ஆதீனம் அப்படி பேசவில்லை…” என்று அவருக்கு சப்பைக்கட்டு கட்டி செய்தியை பரப்பி முஸ்ம் சமுதாயத்தின் வீரியத்தைக் குறைத்துள்ளனர். நபிகள் நாயகத்தை எவன் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லாம்; அப்படி பேசியவரிடத்தில் நாங்கள் சென்று அவரைப் பற்றி அவரே புகழ்ந்து பேசிய வசனங்களை பதிவு செய்து தங்களது டிவியில் ஒளிபரப்பி விட்டு (அவ்வாறு கூறியதற்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்ற நிலையில்) “நான் அவ்வாறு சொல்லவில்லை…” என்று சம்பந்தப்பட்டவர் மறுத்து விட்டார் என்று முஸ்ம் சமுதாயத்தை மழுமட்டையாக மாற்றத் துடிக்கும் இரண்டாம் தர வேலையைச் செய்துள்ளனர்.

உண்மையிலேயே இவர்கள் சரியாக யோசிக்கும் மூளை உடையவர்களாக இருந்தால், “மதுரை ஆதீனம் இவ்வாறு பேசியதற்கு ஆதாரம் உள்ளதா?” என்று நக்கீரனிடத்தில் ஆதாரத்தை கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு நக்கீரனிடம் அவர்கள் முதல் கேட்கவில்லை.
யார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோ அவரிடத்திலேயே சென்று அவர் அவ்வாறு கூறவில்லை என்று சொன்னதை அவர்களுடைய ஆதாரமாக காட்டியுள்ளனர். அவ்வாறு மதுரை ஆதீனம் சொல்லவில்லை என்று மறுத்த உடனாவது நக்கீரனைத் தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாம். அதையும் செய்யாமல் தங்களது பத்திரிகையில் “ஆதீனம் அவ் வாறு பேசவில்லை… அவர் ரொம்ப ரொம்ப(!?) நல்லவர்” என்ற பாணியில் எழுதித் தள்ளிவிட்டு, மதுரை ஆதீனம் தன்னைப் பற்றி சுய தம்பட்டம் அடித்துச் சொன்ன பேட்டியை தங்களது டி.வி.யில் ஒளிபரப்பி விட்டு, அதற்குப் பிறகு கூறு கெட்டுப்போய், அந்த பொய்யன் அமைப் பின் மாநிலச் செயலாளர் நக்கீரனைத் தொடர்பு கொண்டு கேட்டாராம்!
“மதுரை ஆதீனம் அப்படி பேசவில்லை என்று மறுக்கிறாரே!” என்று. அதற்கு நக்கீரன் தரப்பு, “மதுரை ஆதீனம் அப்படி பேசியதற்கு சி.டி. ஆதாரம் உள்ளது…” என்று சொன்ன பிறகும், அந்த ஆதாரத்தை தனது அடுத்த பதிப்பில் வெளியிட்ட பிறகும் இந்த கூறு கெட்டவர்களுக்கு அறிவு வரவில்லை. நக்கீரனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தாதது ஏன்?
இவர்கள் மதுரை ஆதீனம் அவ்வாறு பேசவில்லை என்று உறுதியாக நம்பியிருப்பார்களேயானால், மதுரை ஆதீனம் சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதாக வெளியிட்டதற்காகவும் நபிகள் நாயகத்தை நக்கீரன் இதழ் தேவையில்லாமல் இழிவுபடுத்தியதற்காகவும் (அவர்கள் நம்பிக்கை அடிப்படையில்) இந்த பொய்யர்கள் நக்கீரனைக் கண்டித்து ஏன் போராட்டம் நடத்தவில்லை? இதிருந்தும் இவர்கள் புகழ் விரும்பிகள்தான் என்பது உறுதியாகிவிட்டது. நபிகளாரின் கண்ணியத்தைவிட தங்களது புகழ் உயர வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் இதற்கு காரணமாக இருக்க முடியாது.
பேசவில்லை என்று சொன்னால் விட்டு விடுவீர்களா?

மதுரை ஆதீனம் பேசியதை அவரிடம் நாம் கேட்ட பிறகு நான் அப்படி பேசவில்லை என்று மறுத்து விட்டார். அதனால் சம்பந்தப்பட்டவரே மறுத்ததால் விட்டுவிட்டோம் என்று பொய்யர்கள் தரப்பினர் கூறி வருவதாக அறிகிறோம். ஒருவன் இவர்களிடத்தில் ஒரு கோடி ரூபாயை திருடி விட்டதாக வைத்துக் கொள்வோம். திருடியதற்கு உண்டான அனைத்து சான்றுகளும் தெளிவாக இருக்கும் நிலையில் இவர்களிடத்தில் திருடியவன் வந்து நான் திருடவில்லை என்று சொல்விட்டால் திருடனே திருடவில்லை’ என்று சொல் விட்டான். எனவே அதை பிரச்சினையாக ஆக்க வேண்டாம் என்று கூறி விட்டு விடுவார்களா?

திருடிய திருடன் கடைசியாக கூறியதைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வியாக்கியானம் கொடுப்பார்களா? அந்த திருடனைத் தண்டிக்க வேண்டும் என்றுதான் அவர்கள் கூறுவார்கள்.

அப்படியிருக்கையில், நபிகளார் விஷயத்தில் இவ்வளவு கீழ்த்தரமாக இவர்கள் நடந்ததன் மூலம் அவர்களது பொய் முகம் அவிழ்ந்து விட்டது. அதிலும் மதுரை ஆதீனத்தின் பேட்டியை அவர்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது, பொய்யன் தலைவரோ, “பத்திரிகைகாரர்களே இப்படித்தான்; சொல்லாததையெல்லாம் சொன்னதாக போட்டு விடுவார்கள்…” என்று நக்கீரனை சாடி, மதுரை ஆதீனத்திற்கு கொடி தூக்கியுள்ளார்.

நபிகள் நாயகத்தைப் பற்றி வம்புக்கிழுத்து பேசிய ஆதீனத்திற்கு எதிராக முஸ்ம் சமுதாயம் காட்டிய பெரும் கொந்தளிப்பே மதுரை ஆதீனத்தின் இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்பதும், வருத்தம் தெரி த்திருப்பது இந்து மத சம்பிரதாயப்படி தவறு என்று இருந்தாலும் அவர் இந்த நிலை எடுக்க டிஎன்டிஜேயின் உறுதிமிக்க போராட்ட அறிவிப்பே காரணம் என்பதும் உள்ளங்கை நெல்க்கணி.

இதைப் பாடமாக வைத்துக் கொண்டு இனி எந்த மதத்தவரும் நபிகள் நாயகத்தின் கண்ணியத்தை குலைக்கும் விதமாக பேசுவதிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் முஸ்ம் சமுதாயம் அவர்களை ஒருபோதும் மன்னிக்காது என்பதை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்

மதுரை ஆதீனம் அவர்கள் தான் எழுதிய கடிதத்தை வாசித்து காட்டும் விடியோ Click Here