வந்து விட்டது வயர் இல்லா (wireless) எலக்ட்ரிசிட்டி

lightbulbaகையடக்கத்தொலைபேசி, WLAN போன்ற தொடர்பாடற்றுறையில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த கம்பியில்லாத் தொழில்நுட்பம் இப்போது மின்னியலுக்கும் (Electricity) வந்துவிட்டது. விஞ்ஞானிகளின் இரண்டு நூற்றாண்டு கால ஆராய்ச்சியின் முடிவாக இப்போது வயரினைப் பயன்படுத்தாது மின்னைப்பாய்ச்சி மின் சாதனங்களை இயக்குவதில் வெற்றி கண்டுள்ளனர். கடந்த வருடமே (2008) இது சாத்தியமாகியுள்ளது.

60W உள்ள ஒரு மின்குமிழை 7 அடி தூரத்திலுள்ள ஒரு மின்சாதனத்திலிருந்து காற்று மூலமாக மின்னைப்பாய்ச்சி அதை பிரகாசமாக ஒளிரவும் செய்துள்ளனர். இவ்வாறு காற்றினூடு மின்னைப் பாய்ச்சுவதற்கு ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

வாயால சத்தம்போட்டு ஒரு கண்ணாடிக் குவளையை உடைக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் போடும் சப்தத்தின் அதிர்வெண்ணும், அந்தக் கண்ணாடிக்கவளைக்கு இருக்கின்ற அதிர்வெண்ணும் சமமா இருக்கும் போது இது நடைபெறும்.

இதை ஆங்கிலத்தில் Resonance என்று குறிப்பிடுவர். இதை தான் இங்கேயும் பயன்படுத்துகின்றனர்.

இரண்டு ஒரே மாதிரியான செப்புச் சுருள்களை எடுத்துக் கொண்டு. அதில ஒன்றை மின் சாதனத்திலயும், மற்றோன்றை மின்னோட தொடுத்து சுற்றிலும் பொருத்துகின்றனர்.

அது மின்னை மின்காந்த அலை வடிவில காத்தில பரவச்செய்கின்றது. அந்த அதிர்வெண்ணும், மின்சாரத்தில் இருக்கின்ற செப்புச் சுருளின் அதிர்வெண்ணும் சமமாக வரும் போது இரண்டு செப்புச் சுருளுக்கும் இடையில மின் காற்றினுடு பாய ஆம்பின்றது.

எதிர்காலத்தில இதப் பயன்படுத்தி, விண்ணில இருக்கிற Satelliteல இருந்து சூரியனோட ஒளியில இருந்து மின் எடுத்து பூமிக்கு அனுப்பலாம். சந்திரனில இருந்தும் மின் எடுக்கலாம் என கூறப்படுகின்றது.

இவ்வாறு மின்காந்த அலைகளை வளியினூடு கடத்தும்போது அதனால் மனிதனுக்கோ, ஏனய உயிரினங்களுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது. இதுதொடர்பான மேலதிக தகவல்கள் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

தேடித்தந்தவர்: மதின் முஹம்மது