வடகரை-அறங்கக்குடி கிளையில் இலவச நோட்டு புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் வடகரை-அறங்கக்குடி கிளையில் கடந்த 23 ஜூலை 2011 அன்று ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி அதை தொடர்ந்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஜன்னத் நிஹா அவர்கள் ”கல்வியில் சிறந்தது? உலகக் கல்வியா?
மார்க்கக் கல்வியா?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

மேலும் தொலைபேசி மூலம் ”பித்அத் ஒரு கேடு” என்ற தலைப்பில் சகோதரர் கபுர் மிஸ்பாஹி உரையாற்றினார்கள்.
மற்றும் தாசின் என்ற சிறுவன் ”இன்றைய பெண்களின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
52 ஏழை மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.