வக்ஃபு மருத்துவ கல்லூரி – வெளிவந்தது உண்மை! – கூடுதல் ஆதாரங்கள்!

வக்பு வாரிய மருத்துவக் கல்லூரி குறித்து நாம் கேள்விகளை எழுப்பியவுடன் கதி கலங்கிப் போன வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மானும், அதற்காக அமைக்கப்பட்ட குழுவினரும் மக்களுக்கு விளக்கம் அளிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் அளிக்கும் விளக்கமே அவர்களிடம் உண்மையும் நேர்மையும் இல்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கின்றது.

அவர்கள் வாய்கள் மூலமே உண்மைகள் வெளி வந்து கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும் சிதைந்து ஏற்கனவே இவர்களிடம் பணம் கொடுத்தவர்களை யோசிக்க வைத்துள்ளது.

இந்தக் கல்லூரி குறித்து தொடர்பாளர்களாக குறிப்பிடப்பட்டவர்களும் வக்பு வாரியத்தின் தலைவரும் அளித்துள்ள முரண்பட்ட விளக்கங்கள் இவர்களின் முகமூடியைக் கிழித்துக் காட்டுகின்றன.

இஸ்மாயீல் நாஜீ என்பவர் தொடர்பாளராகக் குறிப்பிடப்பட்ட மூவரில் ஒருவர். இவர் கூறும் விளக்கத்தை பாருங்கள்!

பீ.ஜை. என்னென்ன சந்தேகங்களை எழுப்பி உள்ளாரோ அத்தனைக்கும் பதில் கவிக்கோ அவர்களின் உரையிலேயே இருக்கிறது.

மருதுவக் கல்லூரி வக்ப் வாரியம் நடத்துகிறதா, இல்லை தனியார் டிரஸ்ட்டா? என்ற கேள்வியை இவர் எழுப்புவது டிசம்பர் 22 ந்தேதி வெளியான உணர்வு இதழில். அந்த இதழ் வெளிவருவதற்கு 18 நாட்கள் முன்பாகவே அதற்கு கவிக்கோ பதில் வழங்கி உள்ளார்.

04/12/2010 சென்னையில் வக்ப் வாரியத் தலைவர் கவிக்கோ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல கல்வியாளர்கள், ஆடிட்டர்கள், செல்வந்தர்கள் என சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் மிகத் தெளிவாக கவிக்கோ கீழ் கண்டவாறு கூறினார்கள்:

மிஸ்பாஹுல் ஹுதா வக்ப் மருத்துவக் கல்லூரியை வக்ப் வாரியமோ, மிஸ்பாஹுல் ஹுதா மதரசாவோ நடத்தவில்லை, மாறாக பத்து லட்சம் ரூபாய் ஷேர் வாங்குபவர்கள் பொதுக்குழு உறுப்பினர் ஆவார்கள். முழுக்க முழுக்க நமது சமுதாய மக்களிடம் பங்கு வாங்கப்பட்டு பங்குதாரர்களை கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட்டு பொதுக்குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி மன்ற குழுவினரே மேற்படி கல்லூரியை நடத்தப்போகிறார்கள், என தெளிவாக அறிவித்தார்கள்.

அந்தக் கூட்டத்தின் நிகழ்வுகள் சன் டிவி போன்ற தொலைகாட்சியிலும், தினசரி நாள் இதழ்களிலும் வெளி வந்தன.

இந்த வாக்கு மூலம் சொல்வது என்ன? இந்தக் கல்லூரிக்கும், வக்பு வாரியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இது பணம் படைத்தவர்கள் ஷேர் போட்டு நடத்தும் ஒரு தொழிலாகும் என்பது தான் இதன் கருத்து.

வக்பு வாரியத்துக்கும் இக்கல்லூரிக்கும் சம்மந்தம் இல்லை என்று இவர்கள் இப்படி வெளிப்படையாக அறிவித்து மக்களிடம் நிதி திரட்டினால் அதைப் பற்றி நாம் கண்டு கொள்ள மாட்டோம். இவர்களின் தனிப்பட்ட நாணயம் நேர்மையை நம்பி மக்கள் நிதி கொடுத்தால் அது குறித்து எச்சரிக்கை செய்யும் அவசியம் நமக்கு இல்லை. ஆனால் இஸ்மாயீல் நாஜீ சொல்வது உண்மையா?

இஸ்மாயீல் நாஜியின் விளக்கத்தைப் பார்த்துவிட்டு அப்துர்ரஹ்மான் கான் என்ற ஒரு சகோதரர் நேரடியாக இஸ்மாயீல் நாஜிக்கு மின்னஞ்சல் அனுப்பி அதை நமக்கும் அனுப்பியுள்ளார். அதில் அவர் கேட்டுள்ள கேள்விகளே இஸ்மாயீல் நாஜிக்கு நாம் அளிக்கும் பதிலாக அமைந்துள்ளது.

அந்தக் கடிதம் இது தான்

மரியாதைக்குரிய இஸ்மாயீல் நாஜீ அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். மருத்துவக் கல்லூரி தொடர்பாக நீங்கள் அளித்த விளக்கத்தை நான் பார்த்தேன். அதில் பாதி அளவுக்குத் தெளிவு கிடைத்தது. அது வக்பு வாரியத்தால் நடத்தப்படவில்லை என்பது கவிக்கோ அவர்களாலேயே தெளிவு படுத்தப்பட்டதாக தாங்கள் அதில் தெரிவித்துள்ளீர்கள்.

அது தான் உண்மை என்றால் சுவரொட்டிகள் மூலம் வக்பு வாரிய மருத்துவக் கல்லூரி என்று போட்டதையும் அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதையும் நானே சென்னையில் பார்த்தேன்.

மேலும் வக்பு மருத்துவக் கல்லூரி என்று போடப்பட்ட படத்தை நீடூர் இணைய தளத்தில் நான் பார்த்தேன். இப்போதும் அது அந்த இணைய தளத்தில் உள்ளது.

வக்பு போர்டுக்குச் சம்மந்தம் இல்லா விட்டால் வக்பு என ஏன் போடவேண்டும்?

அல்லது மக்களுக்காக வக்பு செய்யப்பட்டது என்ற அர்த்தம் என்றால் பணம் செலுத்துவோருக்கு லாபம் தருவதாக எப்படி கூறலாம். வக்பு செய்யப்பட்ட பின் எப்படி வருடத்துக்கு ஒரு சீட் கொடுப்பதாக வாக்களிக்க முடியும்?

அதில் ஷேர் சேர்பவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் தானே அது வக்பாகும்?

இந்த சந்தேகத்துக்கு உங்களிடம் இருந்து எனக்கு தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அத்துடன் பீஜே பற்றி நீங்கள் பழைய செய்திகளை வெளியிடப் போவதாக எழுதியது நல்லதல்ல.

ஆனாலும் இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் முக்கியஸ்தர்களிடம் நான் கேட்ட போது பீஜே பற்றிய எந்த விஷயத்தையும் இஸ்மாயீல் நாஜீ தாராளமாக வெளியிடலாம் என்று கூறியதுடன் நீங்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதால் நீடூர் மதரசாவில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அதன் பின் சிம் இயக்கத்தில் இருந்த போதும் அது போல் செய்து மாட்டிக் கொண்டு நீங்கள் நீக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இன்னும் அசிங்கமாக பல செய்திகளைச் சொன்னார்கள் . இவற்றை நிரூபிக்க முடியும் என்றும் சொன்னார்கள். நீங்கள் விரும்பினால் இதற்கும் எனக்கு விளக்கம் தந்தால் உங்களைப் பற்றிய நல்லெண்ணம் எனக்கு அதிகரிக்கும்.

அன்புடன்

அப்துர்ரஹ்மான் கான்

இந்த சகோதரர் சுட்டிக் காட்டும் மருத்துவக் கல்லூரிக்கான அட்வைசரி மீட்டிங் நிகழ்ச்சியின் போது நிர்வாகிகளின் முன்னால் வைக்கப்பட்ட பேனரைத் தான் அந்த சகோதரர் சுட்டிக் காட்டியுள்ளார்.

JMHA என்றால் ஜாமியா மிஸ்பாஹுல் ஹிதா அரபிக் காலேஜ் என்பதன் சுருக்கம். அத்துடன் வக்பு மெடிக்கல் காலேஜ் என்று சேர்த்துள்ளனர். அதாவது இந்த மருத்துவக் கல்லூரியை நடத்துவது நீடூர் மதரஸா நிர்வாகம் என்றும் இது வக்பு அடிப்படையில் நடத்தப்படுகிறது என்றும் இந்த பேனர் சொல்கிறது.. இந்த பேனருக்கு முன்னால் வக்பு வாரியத்தலைவர் உள்ளிட்ட பலர் வீற்றிருக்கின்றனர்.

வக்பு மருத்துவக் கல்லூரி என்றால் அதை வக்பு வாரியம் நடத்த வேண்டும். வக்பு வாரியம் நடத்தவில்லை என்று இஸ்மாயீல் நாஜீ சொல்லி விட்டார். கவிக்கோவே இதற்கும் வக்பு வாரியத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறிவிட்டதாகவும் இஸ்மாயீல் நாஜீ சொல்கிறார். அப்படியானால் வக்பு மருத்துவக் கல்லூரி என்பதன் பொருள் என்ன?

இஸ்மாயீல் நாஜீ சொல்வது போல் இது பங்குதாரர்களால் நடத்தப்படும் நிறுவனம் என்றால் மேற்கண்ட பேனருக்கு என்ன அர்த்தம்?

ஒருவர் பள்ளிவாசலுக்கு வக்பு செய்து விட்டு அதற்காக மாதம் எனக்கு இவ்வளவு தர வேண்டும் எனக் கூறினால் அது வக்பாக ஆகுமா? வக்பு என்றால் இலாபத்தை எதிர்பார்க்காமல் கொடுப்பது தானே. அதற்காகப் பணம் கொடுப்பவர்கள் அல்லஹ்வுக்காக அந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும். அதில் எந்த ரிட்டனும் எதிர்பார்க்கக் கூடாது என்று அறிவித்தால் தானே அது வக்பு ஆகும்?

ஒரு வேளை செல்வந்தர்களிடம் பணம் திரட்டிய பிறகு அவர்கள் பிரதிபலன் எதிர்பார்த்தால் நீங்க்ள் வக்பாகத் தந்து விட்டீர்கள். அதோடு அதை மறந்து விட வேண்டும் என்று சொல்வதற்காக இப்படி யோசித்து வக்பு கல்லூரி என்று போர்டு வைக்கப்பட்டதா?

வக்பு என்று சொல்வதற்கு என்ன அர்த்தம்? வக்பு போர்டு என்று விளம்பரம் செய்வதற்கு என்ன அர்த்தம்?

இவர்கள் அளிக்கும் பதிலே இவர்களைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.

ஆக மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் வக்பு வாரிய மருத்துவக் கல்லூரி என்றும், வக்பு மருத்துவக் கல்லூரி என்றும் ஷேர் சேர்ந்தவர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரி என்றும் இடத்துக்குத் தகுந்தவாறு மாற்றி மாற்றி கூறுவதால் தானே மக்களை நாம் எச்சரித்தோம்.

அது கிடக்கட்டும். இதோ வக்பு வாரியத் தலைவர் சமவுரிமை பத்திரிகையில் கட்டம் கட்டி கூறி இருப்பதைக் காணுங்கள்

இந்த பேட்டியில் வாரியத் தலைவர் கூறுவது என்ன?

இந்தக் கல்லூரி வக்பு வாரியத்தால் நடத்தப்படுகிறது என்று தெளிவாகக் கூறுகிறார். அதில் பாதி இடங்களை அரசுக்குக் கொடுப்பதாகவும் மற்றொரு பாதியை வக்பு வாரியம் வைத்துக் கொள்ளும் என்றும் தெளிவாகக் கூறுகிறார்.

மேலும் தேவைப்படும் 60 கோடி ரூபாயை வக்பு வாரியமே திரட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரியை நிர்வகிக்க வக்பு வாரியமும் மதரஸாவும் இணைந்து அறக்கட்டளை ஏற்படுத்தவுள்ளது என்றும் கூறுகிறார். அதாவது அதன் நிர்வாகத்தில் வக்பு வாரியமும் இருக்கும் என்று கூறுகிறார்.

இதற்கும் இஸ்மாயீல் நாஜி சொல்வதற்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளதா?

மேற்கண்ட வாரியத் தலைவரின் பேட்டியுடன் இஸ்மாயீல் நாஜி கூறுவதை ஒப்பிட்டு பாருங்கள்

மிஸ்பாஹுல் ஹுதா வக்ப் மருத்துவக் கல்லூரியை வக்ப் வாரியமோ, மிஸ்பாஹுல் ஹுதா மதரசாவோ நடத்தவில்லை, மாறாக பத்து லட்சம் ரூபாய் ஷேர் வாங்குபவர்கள் பொதுக்குழு உறுப்பினர் ஆவார்கள். முழுக்க முழுக்க நமது சமுதாய மக்களிடம் பங்கு வாங்கப்பட்டு பங்குதாரர்களை கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட்டு பொதுக்குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி மன்ற குழுவினரே மேற்படி கல்லூரியை நடத்தப் போகிறார்கள், என தெளிவாக அறிவித்தார்கள்.

வாரியத் தலைவர் அப்துர் ரஹ்மான் வக்பு வாரியத்தின் கல்லூரி என்கிறார்.

ஆனால் அதற்கு ஆள்பிடிக்கும் இஸ்மாயீல் நாஜி வக்பு போர்டுக்கு சம்மந்தம் இல்லை என்கிறார். வக்பு போர்டுக்குச் சம்மந்தம் இல்லை என்று வாரியத் தலைவரே அறிவித்ததாகவும் அவர் கூறுகிறார்.

இரண்டு பேரில் யார் சொல்வது சரி என்று முதலில் பைசல் பண்ணி விட்டு இஸ்மாயீல் நாஜி வாய் திறப்பது நல்லது.

இஸ்மாயீல் நாஜியின் மேற்கண்ட தகவல் படி பார்த்தால் அப்துல் ரஹ்மான் பொய் சொல்வதில் வல்லவர் என்பது தெளிவாகிறது. கவிதைக்குத் தான் பொய்யழகு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது பொது வாழ்க்கைக்கும் பொய்யழகு என்று மாற்றி விட்டார்கள் போலும்.

வக்பு வாரியத்துக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்பதும் வக்பு வாரியமே இதை நடத்துகிறது என்பதும் எப்படி உண்மையாக இருக்க முடியும்? இந்த இரண்டில் எது உண்மை என்றாலும் வாரியத் தலைவர் பொய் சொல்லி இருக்கிறார் என்பது உறுதியாகிறதா? இல்லையா?

இஸ்மாயீல் நாஜீ எடுத்துக் காட்டிய வாரியத்தலைவரின் மேற்கோளின் படி மருத்துவக் கல்லூரிக்கும் வக்பு வாரியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று ஆகிறது. இது தனவந்தரகள் கூடி பங்கு சேர்ந்து நடத்தும் தொழில் என்று ஆகிறது. ஆனால் வாரியத்தலைவர் தானே கையெழுத்துப் போட்டு பலருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் வக்பு வாரியமே இதை நடத்தப் போவதாக வக்பு வாரியத்தின் லட்டர் பேடில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தைப் பாருங்கள்

மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப் போவதாக மக்களிடம் நிதி கேட்கும் போது வக்பு வாரியம் இதை நடத்தப் போகிறது எனக் கூறி இதற்கு வக்பு வாரியம் – அதாவது அரசாங்கம் – பொறுப்பு என்று நம்பிக்கை ஊட்டப்படுகிறது, ஆனால் செல்வந்தர்களை அழைத்து பேசும் போது இதற்கும் வக்பு போர்டுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறப்படுகிறது. அப்படியானால் இது அப்பட்டமான மோசடி அல்லவா?

தன்னுடைய அதிகாரத்தை அப்துல் ரஹ்மான் தவறாகப் பயன்படுத்தி பணம் பண்ண திட்டமிட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார் என்பது இதில் இருந்து உறுதியாகிறது.

அல்லது தனவந்தர்களிடம் பணம் வசூலித்து முடித்தவுடன் இது வக்பு வாரியக் கல்லூரி. உங்களுக்கு இதில் உரிமை இல்லை என்று கூறுவதற்காக இந்தத் திட்டமா என்று தெரியவில்லை.

ஆனால் மருத்துவக் கல்லூரியின் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட மூவரும் வாரியத் தலைவரை விட விபரமானவர்களாக உள்ளனர். வாரியத் தலைவர் கலைஞருக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறோம். வக்பு வாரியத்துக்கும் இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று தெளிவாக அறிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி இதை நடத்துவது ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா ட்ரஸ்ட் தான் என்று இவர்கள் கூறுகின்றனர்.

மேலும் மருத்துவக் கல்லூரிக்காக 50 ஏக்கர் நிலத்தை ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா அளித்ததாக அப்துல் ரஹ்மான் மேற்கண்ட கடிதத்தில் கூறுகிறார். ஆனால் நிலம் கொடுத்தவர்களோ 25 ஏக்கர் நிலம் கொடுத்ததாகக் கூறுகின்றனர். இங்கேயும் இவர் கவிக்கோ அதாவது நன்றாகப் புளுகக் கூடியவர் என்று நிரூபிக்கிறார்

கிராமத்தில் 25 ஏக்கர் நிலம் சுமார் 50 லட்சம் ஆகும். ஆனால் மொத்த ஷேர் 60 கோடி என்றும் நூறு கோடி என்றும் மேற்கண்ட மூவரும் கூறுகின்றனர். 100 கோடியில் 50 லட்சம் என்பது அரை சதவிகிதம் தான். அதாவது அரை சதவிகிதப் பங்கு செலுத்திவிட்டு ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா என்ற ட்ரஸ்ட் அமைப்பதும் மோசடியாகும். நீ அவல் கோண்டு வா! நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து ஊதி ஊதி திண்ணலாம் என்று கூறுவது போல் ஒரு சத்தித்திட்டம் இது என்பது அப்பட்டமாகத் தெரிகின்றது.

இதோ அவர்களின் உரையாடல்களைக் கேளுங்கள் நாம் மேலே சொன்ன அனைத்தும் அதில் இருப்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.

9443150959

9443222490

9443353666

பணம் போட்டவர்களுக்கு என்ன கிடைக்கும்? அதிலும் குழப்பம் தான் நிலவுகிறது.

மொத்த மாணவர் எண்ணிக்கை 100 என்று வாரியத் தலைவர் கூறுகிறார். அதில் 50 இடம் கட்டாயம் அரசாங்கத்துக்குப் போய் விடும். இதை வாரியத் தலைவரும் ஒப்புக் கொள்கிறார்.

அப்படியானால் மீதியுள்ள ஐம்பது இடங்களில் வாரியத் தலைவர் போன்றவர்க்ளுக்கு எத்தனை இடம் என்று தெளிவுபடுத்தவில்லை. அந்த வகையில் 20 இடங்களை அல்லது பத்து இடங்களைக் கழித்தால் மீதம் இருப்பது நாற்பது அல்லது முப்பது தான்.

அதிலும் அனைத்து இடங்களையும் பங்குதாரருக்குக் கொடுத்து விட்டால் கல்லூரியை எப்படி நிர்வாகம் செய்ய முடியும்? எனவே அதில் சரிபாதியை நிர்வாகம் தனது ஒதுக்கீடாக வைத்துக் கொண்டால் மீதி உள்ள 15 இடங்களை எப்படி நூறு பங்குதாரர்களுக்குக் கொடுக்க முடியும்?

சுழற்சி முறையில் கொடுப்பதாக இருந்தால் ஏழு வருடத்துக்கு ஒரு இடம் கிடைக்கும். அவ்வளவு தான்.

அல்லது குலுக்கல் முறையில் கொடுக்கப்படும். இப்படித்தான் ஒர் உரையாடலில் கூறப்படுகிறது. அதாவது சூதாட்டம் மூலம் அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கலாம்.

அது மட்டுமின்றி மேற்கண்ட வாரியத் தலைவரின் அறிக்கையில் உள்ள பொய்யை நீடூரைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அறியலாம். 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது என்று வாரியத் தலைவர் சொல்லி இருக்கிறார்.

300 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனை கட்டப்பட்டு வருவதை புகைப்பட மற்றும் வரைபட ஆதாரத்துடன் இவர்கள் நிரூபிக்க வேண்டும். எந்தக் கட்டுமானப் பணியும் நடக்காத போது 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது என்று எப்படி இவர் கூறினார். இதுவும் கவிதை என்று நினைத்து கரடி விடுகிறாரா?

மருத்துக் கல்லூரி நடத்தும் ட்ரஸ்டில் அப்துர் ரஹ்மான் சேர்மனாக உள்ளார். அவர் கருனாநிதியின் நண்பர் என்ற காரணத்தால் அவரைப் பயன்படுத்துகிறோம். அவர் செல்வாக்கைப் பயன்படுத்தி அனுமதி வாங்கிவிடுவார் என்று நம்புகிறோம் என்று அதன் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தொலைபேசி மூலம் சித்தார் கோட்டை சகோதரர் கேட்ட போது சொல்லியுள்ளனர். அந்த உரையாடல் முன்னர் இடம் பெற்றுள்ளது

அதாவது வாரியத்தின் தலைவர் என்ற முறையில் அவர் சேர்மனாக இல்லை. மாறாக கருணாநிதியின் நண்பர் என்ற முறையில் தான் இவர் சேர்மனாக்கப்பட்டுள்ளார் என்று அவர்கள் கூறுகின்றனர். நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இவர் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து தூக்கப்படுவார். அப்போது இவர் சேர்மனாக இருப்பாரா? அல்லது வாரியத்தின் புதிய சேர்மன் இந்தப் பொறுப்புக்கு வருவாரா?

தேர்தல் வருவதற்குள் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறப்படுமா? பெறப்படாது என்றால் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அனுமதி பெறுவது எப்படி? இவரைப் போன்றவர்கள் இதில் ஈடுபட்டதாலேயே அனுமதி கிடைக்காமல் போகுமே? அனுமதி அளிப்பது மத்திய அரசின் அதிகாரம் என்ற போதும் மாநில அரசு ஆட்சேபனை செய்தால் மத்திய அரசு எப்படி அனுமதி அளிக்கும்?

முடிவாக நாம் சொல்வது இது தான்.

இதை வக்பு வாரியம் நடத்துகிறது என்றால் அதை மட்டும் சொல்லுங்கள்
வக்பு வாரியமும் நீடூர் மதரசாவும் இணைந்து நடத்துகிறது என்றால் அதை மட்டும் சொல்லுங்கள்
அரசும் வக்பு வாரியமும் இணைந்து நடத்துகிறது என்றால் அதை மட்டும் சொல்லுங்கள்
இதை மக்களிடம் நன்கொடை பெற்று வக்பாக நடத்துகிறோம் பணம் கொடுத்தவர்கள் மறுமையில் தான் நன்மையை எதிர்பார்க்க வேண்டும் என்றால் அதை மட்டும் மக்களிடம் சொல்லுங்கள்
அல்லது ஷேர் சேர்த்து கமர்ஷியலாக நடத்துகிறோம். அதன் பங்குதாரர்களே அதை நிர்வகிப்பார்கள் என்றால் அதை மட்டும் மக்களுக்குச் சொல்லுங்கள்
அதன் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை பங்குதாரர்கள் தேர்வு செய்வார்கள் என்றால் அதை மட்டும் மக்களுக்குச் சொல்லுங்கள்
அல்லது அதன் நிர்வாகிகளாக நிரந்தர சேர்மன் மற்றும் நிர்வாகிகள் இருப்பார்கள் என்றால் அதை மட்டும் சொல்லுங்கள்
மருத்துவ மனை கட்டட்டப்பட்டு வந்தால் கட்டப்பட்டு வருகிறது என்று சொல்லுங்கள்.
காலியிடமாகத் தான் உள்ளது. இனிமேல் தான் அதற்கான வரைபடம் தயாரித்து பல்வேறு மட்டங்களில் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னர் தான் மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது உங்கள் கனவு என்றால் அதை மட்டும் மக்களிடம் சொல்லுங்கள்

ஆனால் இடத்துக்கு ஏற்ப அனைத்தையும் நீங்கள் சொல்வது என்றால் மக்கள் பைத்தியக்காரர்கள் என்று முடிவு செய்து விட்டீர்கள். ஒயிட் காலர்ஸ்கள் எதைச் சொன்னாலும் நம்பக்கூடிய ஏமாளிகள் என்று மக்களைக் கருதுகிறீர்கள்.

உங்களை நம்பி பணம் தந்தவர்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக நாம் எச்சரிக்கை செய்தது இப்போது மேலும் உறுதியாகிறது.

முதலில் நம்க்கு சந்தேகம் தான் இருந்தது. இவர்கள் முரண்பட்டு பேசுவதால் இதில் கடுகளவும் நம்பகத் தன்மை இல்லை என்பது உருதியாகிறது. எனவே இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த பொதுமக்களுக்கும் தனவந்தர்களூக்கும் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.