கிழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த கடந்த 16 – 3 – 2010 அன்று  கீழக்கரை வடக்குதெரு கொந்தகருணை அப்பா தர்கா செல்லும் வழியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் சகோதரர் :- அப்துல் அஸீஸ் அவர்கள் ” மவ்லீது இறைவணக்கமா ? ” என்ற தலைப்பிலும் சகோதரர் :- அசாயிம் சயீத் அவர்கள் ” இஸ்லாத்தின் பார்வையில் கூடு கொடி” என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.