ராம்நாதபுரம் TNTJ வின் ஜுலை மாத சமுதாயப் பணிகள்!

01-07-09:

TNTJ தேவிபட்டினம் கிளை சார்பாக தேவிபட்டினம் கடற்கரைத்தெருவில் வசிக்கும் ஜைத்தூன் பீவி என்ற பெண்ணிற்கு சிறுவியாபாரம் செய்வதற்காக ரூபாய் 2500 வழங்கப்பட்டது.

01-07-09:

TNTJ கீழக்கரை தெற்குத்தெரு கிளை சார்பாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ:ஜலீல் கலந்து கொண்டு சகோதரர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

02-07-09 :

TNTJ தேவிபட்டினம் கிளை சார்பாக பெண்களுக்கான வாராந்திர பயான் நிகழ்ச்சி தேவிபட்டினம் மூட்டைக்காரத்தெருவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோதரி: யாஸ்மின் ஆலிமா கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

03-07-09 :

TNTJ கீழக்கரை தெற்குத்தெரு கிளை சார்பாக மாணவர்களுக்கான பயான் பயிற்சி நடைபெற்றது. .இதில் சகோ:முஜிபு மற்றும் சகோ:ஆதில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

04-07-09 :

இராமநாதபுரம் மாவட்ட தலைமையகத்தில் காலை 10 அளவில் மாவட்ட பொதுக்குழு நடைபெற்றது.இதில் மாவட்ட தலைமைக்கு சொந்த பள்ளிவாசல் கட்டுவது சம்பந்தமாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் சகோ:அப்துல் ஹமீது கலந்து கொண்டார்.

05-07-09:

TNTJ தொண்டி கிளை சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலப்பேச்சாளர் சகோ:அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி ‘தர்ஹா வழிபாடு ஓர் வழிகேடு’என்ற தலைப்பிலும், சகோ:தமீம் ‘நரகத்தில் பெண்கள் அதிகம் ஏன்?’ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

05-07-09 :

TNTJ தேவிபட்டினம் கிளை சார்பாக மதர்ஸா தெருவில் வசிக்கும் ரம்ஜான் பீவி என்ற சகோதரிக்கு பிரசவ உதவியாக ரூபாய் 2500 வழங்கப்பட்டது.

06-07-09 :

TNTJ கீழக்கரை தெற்குத்தெரு கிளை சார்பாக பெண்களுக்கான வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. .இதில் சகோதரி: ஆலிமா.சுல்த்தானியா கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

10-07-09 :

TNTJ இராமநாதபுரம் நகர் கிளை சார்பாக ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக டெல்லி உயர் நீதிமன்றமும்மத்திய சட்ட அமைச்சரும் பேசியதை கண்டித்து இராமநாதபுரம் அரசுப்பணிமனை முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரை மாநிலப்பேச்சாளர் சகோ:M.S சுலைமான் நிகழ்த்தினார்.

10-07-09 :

TNTJ கீழக்கரை தெற்குத்தெரு கிளை சார்பாக மாணவர்களுக்கான பயான் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

11-07-09 :

அன்று கீழக்கரை TNTJ தெற்குத்தெரு கிளை சார்பாக புதிய பள்ளி கட்டுவது தொடர்பான மசோரா கூட்டம் நடைபெற்றது.

11-07-09 :

அன்று TNTJ வண்ணான்குண்டு கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. உரை சகோ.மு.ஜைனுல் ஆபிதீன்.

13-07-09 :

அன்று கீழக்கரை TNTJ தெற்குத்தெரு கிளை சார்பாக குர்ஆன் விளக்கஉரை பயான் நடைபெற்றது.

17-07-09 :

தேவிபட்டிணம் TNTJ கிளை சார்பாக மதரஸா தெருவில் பெண்களுக்கான வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி சிராஜ் பாத்திமா ஆலிமா அவர்களும், சகோதரி : ஜீவைரியா அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.

24-07-09 :

பாபர் மசூதி சம்பந்தமான ஆவணங்கள் களவு போனதை கண்டித்து இராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரை சகோ.சாதிக்

30-07-09 :

தேவிபட்டிணம் கடற்கரைத் தெருவில் பெண்களுக்கான வாராந்திர பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி.யாஸ்மின் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.