ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும்கருணையால் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்ட செயர்குழு இராமநாதபுரம் மாவட்ட தலைமையகத்தில் ஜனவரி 7 அன்று காலை 10:30 முதல் மதியம் 2:00 மணிவரை மாவட்டத் தலைவர் ஸைஃபுல்லாஹ் கான் தலைமையில் நடைபெற்றது.ramnad_sayarkulu_1ramnad_sayarkulu_2

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சகோ: S.S.U.ஸைஃபுல்லாஹ் ஹாஜா அவர்களும் சகோ:M.S.சுலைமான் அவர்களும் கழந்து கொண்டனர் துவக்க உரை சகோ:தமீம் அவர்கள் நிர்வாகிகளிடம் இருக்கவேண்டிய பண்புகள்குறித்து விளக்கிணார் அதனை தொடர்ந்து சகோ:M.S.சுலைமான் அவர்கள் முன்னால் மாநில நிர்வாகிகளான சகோ:S.M பாக்கர் சகோ:தொண்டியப்பா சகோ:.முனீர் சகோ:.சித்தீக் சகோ:செய்யது இக்பால் சகோ:ஜிப்லி சகோ:அபுஃபைசல் ஆகியோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உருப்பிணரில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கிணார்

இதனை தெடர்ந்து இதுவிசயத்தில் உள்ள ஐயப்பாடுகள் குறித்து வினாஎழுப்பப்பட்டது அதற்கான முழுமையான விளக்கம் சகோ: S.S.U.ஸைஃபுல்லாஹ் ஹாஜா சகோ:M.S.சுலைமான் அவர்களாள் தெழிவுபடுத்தப்பட்டது இப்படிப்பட்டவர்களை எப்படி இவ்வளவு காலம்; நடவடிக்கை எடுக்காமள் வைத்திருந்தீர்கள் என்றஆதங்கத்தோடு காலம்தாழ்த்தி எடுத்திருந்தாழும் சரியான நடவடிக்கை என்றதிருப்தியோடு கழைந்துசென்றனர். இதில் மாவட்ட செயர்குழு உருப்பிணர்கள் 114 பேர் கழந்துகொண்டனர். எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவணுக்கே…