ராஜபாளையத்தில் இரத்த தான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 3-10-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாம் அரசு பொது மருத்துவ மனையுடன் இணைந்து நடத்தப்பட்டது.  தனிக்கை குழு உறுப்பினர் சைபுல்லாஹ் காஜா அவர்கள் இம்முகாமிற்கு தலைமை தாங்கினார்கள். 40 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.

முகாமில் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  மீதி நபர்களில் இரத்த வகைகளை கண்டறிந்து விட்டு அவசர தேவை ஏற்படும் போது அழைத்துக் கொள்கிறோம் என்று அரசு மருத்துவர்கள் கூறியது குறிப்பிடதக்கது.