ராஜகிரி – பண்டாரவாடையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

20022010(078)20022010(059)20022010(072)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி – பண்டாரவாடை கிளையில் 20.02.10 அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் மாநிலத் தலைவர் சகோ:பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் நன்மையை ஏவி தீமையை தடுத்தல் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.  சகோ:இப்ராஹீம் காசிமி அவர்கள் ஈமானும் நல்லறமும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் A.S.அலாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான், மாவட்ட து. செயலாளர் குலாம், கிளைத் தலைவர் A.ஜபருல்லாஹ், கிளைச் செயலாளர் M.தாலிப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக கிளைப் பொருளாளர் M.அப்பாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.இதில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.