ராஜகிரி – பண்டாரவாடையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி  – பண்டாரவாடை கிளையில் நேற்று (19.03.10 வெள்ளிக்கிழமை) மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் முகைதீன் மவ்லீது ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் சகோ:சைய்யது சுல்தான் அவர்கள் இஸ்லாத்தில் நல்லொழுக்கம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான், கிளை தலைவர் A.ஜபருல்லாஹ், கிளை செயலாளர் M.தாலிப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை பொருளாளர் M.அப்பாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.