ராசல்கைமா மண்டலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ராசல்கைமா மண்டல பொதுக்குழு கடந்த 03.09.2010 அன்று இரவு 10.00 மணிக்கு அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஹாமீன் இப்ராஹீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேலாண்மைகுழு உறுப்பினர் சகோதரர் எம்.எஸ் சுலைமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் இருக்கவேண்டிய பண்புகள் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.

இக்கூட்டத்தில் மண்டல நிர்வாக அளவில் கூடுதலாக 3 செயலாளர்கள் பொதுக்குழு ஒப்புதலுடன் நியமிக்கபட்டனர்.

ஜமாஅத் செயல்பாடுகளை திட்டமிடுதல். ஒருங்கிணைத்தல் , தொய்வின்றி தாஃவா பணி, சமுதாய பணி, உறுப்பினர் சேர்க்கை, மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெரிய அளவில் மார்க்க நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எம்.எஸ் சுலைமான் அவர்களும்அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஹாமீன் இப்ராஹீம் அவர்களும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இதில் உறுப்பினர்கள், பகுதி பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.