ரவ்தா கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

கடந்த 17-12-2010 வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா தொழுகைக்கு பின் குவைத் மண்டலம் ரவ்தா கிளையின் சார்பாக மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி ரவ்தா கத்தா 5 ல் நடை பெற்றது. இதில் மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட சட்ட விரோதமான தீர்ப்பை கண்டித்து குவைத் மண்டல பேச்சாளர் புதுவலசை H.M.S.கான் அவர்கள் TNTJ கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதை தொடர்ந்து குவைத் மண்டல தாயி A.K.சிராஜுதீன் ஃபிர்தவ்சி அவர்கள் பாபர் மசூதி தீர்ப்பும் ஜனவரி 27 போராட்டமும் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை ரவ்தா கிளையின் செயலாளர் வடசா R.ஹசன் முஹம்மது பந்தர் தலைமையில் நடைபெற்றது.

இதில் ரவ்தா கிளையின் தலைவர் T.பிலால் தலைமையுரைடுடன் கூட்டத்தை துவக்கி வைத்தார். ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை ரவ்தா கிளை தொண்டரணி சிறப்பாக செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!