ரமளான் மாதத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சிகள்

p1010671p1010670280820090170409200903004092009024அல்லாஹ்வின் அருளால் வேகமாக வளர்ந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் ரமலான் முழுவதையும் பயனுள்ள வகையில் செலவிட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.

தாயகத்திலிருந்து மாநில மேலாண்மைக் குழு உறுப்பினரும், அல் இர்ஷாத் மகளிர் கல்லுரிப் பேராசிரியருமான சகோ. M.S சுலைமான் அவார்களை அழைத்து 20 நாட்களுக்கு தொடர் பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல் பத்து நாட்கள் ‘பாவங்களும் தண்டனைகளும்’ என்ற தலைப்பின் கீழ் நாம் சாதாரணமாக எண்ணக்கூடிய விஷயங்கள் அல்லாஹ்விடத்தில் எவ்வளவு பெரிய தண்டனைகளை அழகாக விளக்கப்பட்டது.

அடுத்த பத்து நாட்கள் ‘நரபமும் சொர்க்கமும்’ என்ற தலைப்பில் தொடர் பயான் நடந்தது. நரகத்தை பற்றிய அச்சமும் சொர்க்கத்தைப் பற்றிய ஆசையையும் மக்களிடத்தில் தூண்டும் வண்ணம் சொற்பொழிவு அமைந்தது

இந்த நிகழ்சி தினமும் இஃப்தாருக்குப்பின் நடந்தது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் இதுவல்லாது எல்லா வியாழன் இரவுகளிலும் ஸஹர் வரை சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சியும் அதன்பின் பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஆலிமா ஆதம் ஃபாத்திமா பெண்களுக்கு சிறப்பு பாயான் நிகழ்ச்சியை நடத்தினார். எல்லா நாட்களிலும் ஸஹர் உணவு ஏற்பாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அது போன்று முஹர்ரக் கிளையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து ‘நாம் செய்ய வேண்டியது’ என்ற தலைப்பின் கீழ் சகோ. M.S சுலைமான் உரையாற்றினார். இதே போன்று ரிஃபா கிளையிலும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து ‘இறையச்சம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

குடைசி 10 ஒற்றைப்படை இரவுகளில் பெண்களுக்கான சிறப்பு  கேள்வி பதில் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 80 முதல் 100 பேர் கலந்துகொண்டனர். ஜகாத் பற்றிய  வுNவுது வின் நிலைப்பாடு, ஸலபியிஸம் எப்போது தோன்றியது ? இப்போது உள்ள ஸலபிக் கொள்கையில் உள்ள முரண்பாடுகள் பற்றி விறுவிறுப்பாக நிகழ்ச்சி செல்லும் அளவுக்கு சூடான கேள்விகள் எழுந்தது அவற்றிற்கான சரியான விளங்கும் வகையில் சகோ. ஆளு சுலைமான் அவர்களால் விளக்கம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்ச்சியின் கடைசியிள் நடந்த சொற்பொழிவிலிருந்து கேள்வி கேட்க்கப்பட்டு பரிசுகளாக ஊனுஇ புத்தகம் போன்றவை கொடுக்கப்பட்டது. கடைசி நாளன்று சிறப்பு வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது அதில் வென்றவருக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கப்பட்டது. தினமும் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்டவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் குலுக்கள் முறையில் தேர்வு செய்து அழகான மதிப்புள்ள கைக்கடிகாரம் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் வுNவுது நிர்வாகிகளும் உறுப்பினர்களும் நல்ல முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.