மைசூரில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

DSC00004DSC00005கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கௌசர் நகர் பகுதியில் கடந்த 14.02.2010 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு கர்நாடக பகுதி TNTJ செயலாளர் சகோதரர்:முஹம்மத் கனி தலைமை தாங்கினார்.

மாலை 5 மணி அளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதலாவதாக TNTJ கோவை மாவட்ட பேச்சாளர் சகோதரி: சுமையா அவர்கள் “இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து TNTJ கோவை மாவட்ட பேச்சாளர் சகோதரர்: AW நாசர் அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் மூடநம்பிக்கை” என்ற தலைப்பில் உரை ஆற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்- அல்ஹம்துலில்லாஹ்!!

இறுதியாக கர்நாடக பகுதி TNTJ மைசூர் மாவட்ட தலைவர் சகோதரர்:ஷம்சுத்தீன் அவர்களின் நன்றயுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.