மேலாப்பாளையத்தில் ரூபாய் மூன்று லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

fithra2fithra1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மேலப்பாளையத்தில் ரூ. 3,00,000 (ரூபாய் மூன்று லட்சம்) மதிப்புள்ள அரிசி, பருப்பு, நெய், சமையல் எண்ணெய், தேங்காய், மசாலா தூள் உள்ளிட்ட பொருட்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. மிகவும் ஏழைக் குடும்பங்களுக்கு இறைச்சியும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் ஏழைகளின் வீடு தேடிச் சென்று 2700 குடும்பங்களுக்கு இந்த உணவுப் பொருட்களை வழங்கினர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா, மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ். சுலைமான், நகரத் தலைவர் எஸ்.பி. மைதீன், செயலாளர் ரோஷன், பொருளாளர் நிவாஸ் மற்றும் வார்டு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.