மேலப்பாளையம் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பில் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகிலுள்ள ஈத்கா திடலில் கடநத் 7-11-2011 அன்று நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மவ்லவி எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி பெருநாள் தொழுகையை நடத்தி வைத்து பெருநாள் குத்பா எனப்படும் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இந்தத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.