மேலப்பாளையத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 27.03.2010 சனிக்கிழமை அன்று பெரிய தெருவில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு நகரத் தலைவர் எஸ்.பி. மைதீன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி “ஷைகு முரீது” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மேலும் மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ். சுலைமான் “பேய் பிசாசு உண்டா?” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில்  எஸ்.ஒய். செய்யது மஸ்ஊது யூசுபி, மேலப்பாளையம் நகரச் செயலாளர் ரோஷன் ஆகியோர் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.