மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் சொட்டு மருந்து முகாம்

நேற்று (பிப்ரவரி 27) தமிழக அரசு போலியோ தினமாக அறிவித்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியது.

இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்ம் மேலப்பாளையம் கிளை சார்பில் மஸ்ஜிதுர் ரஹ்மான் வளாகத்தில் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இது தவிர அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று மேலப்பாளையம் நகரம் முழுவதும் அமைக்கப்பட்ட முகாம்களில் TNTJ தொண்டர்கள் களப்பணியில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கான உதவிகளைச் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!