மேலப்பாளையத்தில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் எக்கீன் பிள்ளை மேலத் தெருவில் கடந்த 25-12-2010 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் எம்.எஸ் சுலைமான் மற்றும் அப்துல் கரீம் ஆகியோர் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.